பக்கம்:இந்திர மோகனா.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

இந்திர மோஹனா

(ஜீவனன் பிரவேசித்தல்)

ஜீவ:- ஆ ! எவ்வளவு இனிமையான குரல்? யாராவது அப்ஸாஸ்த்ரீ பாடுகிறாளோ அல்லது வாணியே கானஞ் செய் கிறாளோ?

ராகம்: ஆனந்த பைரவி.

கானகந்தன்னிற் கூவும் கருங்குயிற் குரலோவன்றி வானவர் போற்றநின்ற வளங்கெழு குழலோயாழோ ஆனந்த மிகுந்தவிந்த அற்புதக்கானந்தானும் தேனதாய்க் கேட்போர்நெஞ்சைத் திறமுடன்வசமேயாக்கும். காந்தம் இரும்பை யிழுப்பது போல் அந்தத்தொனி என்னை அத்திசையில் இழுக்கிறது. நான் எங்குச் சுற்றிப் பார் த்தும் ஒருவரும் கண்ணுக்குப் புலப்பட வில்லையே. இது என்ன வாச்சரியம்! அக்குரலைக் கேட்டது முதல் என் உடல், பொருள், ஆவி எல்லாம் அத்திசையை நாடுகின்றன. அத் திசையை நோக்கிப் போய் யார் பாடுவதென்பதைப் பார்ப் போம் (போகிறான்).

என்ன! (ஒரு பாறையை உற்று நோக்கி) ஆ! இது வானத்தில் உலாவும் மதி இப்பாறையின்மீது தவழ்கின் றானோ? (அருகில் சென்று உற்று நோக்கி) மதியென்றல் லவோ மயங்கினேன்? இது ஒரு பெண்பாவையாயல்லவோ காணப்படுகின்றது.

ராகம். ஹிந்துஸ்தான் தோடி.

அந்தியம்பொழுதிலிங்கே அரம்பைபைப்போன்றமாது சிந்தை நொந்தவளே போலச் சிரமமாய்த் துபிலலேனோ விந்தையாமிந்தமங்கை வீரியமுடனேஎன்றன் அந்தரங்கத்தில்மேவி யழுந்தியேபுகுந்துகொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/137&oldid=1559605" இலிருந்து மீள்விக்கப்பட்டது