இந்திர மோஹனா
121
ஆ, ஆ! இவள் அழகை என்னவென்று சொல்வது? பிரமதேவன் தன் முழு சாமர்த்தியத்தையும் காட்டும் பொருட்டு இத்தருணீமணியைச் சிருஷ்டித்தானோ?அந் தோ! அப்பிரமனே இப்பொழுது இவள் உறங்கும் எழி லைக் கண்டால் காமுறுவனென்றால் என் மனம் அவளை நாடியது வியப்பன்று. சீ ! என்ன மடத்தனமான எண்ண முண்டாகிறது? இவள் எந்தப் புண்யவந்தனது மனைவியோ? அல்லது எந்தப் புண்ணியவான் அடையப்போகும் அருங் கிளியோ? மனமே! பரஸ்த்ரீயைக் கண்டு பறக்காதே. ஈசா ! என் மனத்தை வேறிடத்திலிருத்த முயன்றாலும் அது இவ் விளங்கொடியாள்பால் நாடுகின்றது. ஆ ஆ! என்ன? கண்ணைத் திறந்து மறுபடியும் மூடிக்கொண்டாள் ? நித்திரையின் கலக் கமோ? அப்படித்தானிருக்கும். தூக்கத்தில்கூட அவள் விழித்த விழி என்ன அழகு? நான்முகனே ! உன் வேலைத் திறந்தான் என்னோ.
ராகம்: செஞ்சுருட்டி.
மின்னல் நேரிடையோமானின் விழியினைப்பழிக்கு நோக்கோ துன்னியபின்னல்பாம்பின் துகளறுபட
மோபாவை
தன்னுடைமுகமோமேகந் தழுவியதிங்கள் தானோ கன்னியினெழிலால் நெஞ்சங் கலங்குறில் வியப்பியாதோ?
(மோஹனா "நாதா" என்று வாய்பிதற்றக் கேட்டு) ஆ ! சந்தேகமேயில்லை. இவள் குபலேதான் நான் கேட்டது. பாடிக் களைத்து நித்திரைசெய்கிறாள் போலிருக்கிறது. இவள் நாதா என்று வாய் பிதற்றுவதின் காரணம் யாதோ? என்ன ? கையில் ஏதோ வைத்துக்கொண்டிருக்கிறாள்? நித்தி ரையில்கூட நழுவாமல் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டிருக் கின்றாளே? (கையிலிருப்பதை நோக்கி) ஆ! இது என்ன
ஹா!