பக்கம்:இந்திர மோகனா.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

இந்திர மோஹனா

ஆச்சரியம்! என்னுடைய படம் இவள் கையில் எப்படிக் கிடைத்தது? நான் இவள்மேல் காதல்கொண்டிருப்பதுபோல் இவளும் என்மேல் காதல்கொண்டிருக்கிறாளோ? அப்படி யிருப்பதற்கு இவளை நான் இதற்குமுன் கண்டதில்லையே ! இவ்வளவு அழகு வாய்ந்த மங்கையை நான் இதுவரையில் பார்த்ததில்லை. இவள் என்ன தேவகன்னிகையோ அல்லது, ராகம்: கல்யாணி.

மணிமார்பன்மீது மகிழ்வாயமர்ந்த மணிமங்கைதானோ வறியேன் தணிகாசலத்தில் தனியாய்விளங்கும் சிவகாமிதானோ வறியேன் கணைமேவுகாமன் கருதிக்களிக்கும்

ரதிதேவிதானோ வறியேன்

இணையின்றிநாளும் எனையேவிரும்பும்

எழில்நங்கைதானோ வறியேன்.

இவளைக் கண்டதுமுதல் என் மனம் ஒருவித தாபத்தை யடைகின்றது. நம்முடைய படம் இவள் கையில் எப்படி அகப்பட்டதென்பதை யறியும்பொருட்டு இவளை எழுப்பு வோமா? அப்படிச் செய்யின் என்னை என்னவென்று நினைப் பாள்? ஆ! அதோ, அவளே அசைகிறாள். எழுந்துவிடு வாள்போலிருக்கிறது.

மோஹனா: (வாய்பிதற்றுகிறாள்) பிராணநாதா ! நான் உம்மை எங்குத் தேடியும் காணவில்லையே. உமது பிரிவாற் றாமையைச் சகிக்க இயலவில்லை. கருணாநிதே! நீர் என்னை இச்சமயம் கண்திறந்து பார்க்கலாகாதா?

ஜீவனன்:-ஆ,ஆ ! இவள் தன் பிராணநாதரைத் தேடி வந்திருக்கிறாள் போலல்லவோ இருக்கிறது. ஐயோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/139&oldid=1559607" இலிருந்து மீள்விக்கப்பட்டது