பக்கம்:இந்திர மோகனா.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




xi

கொ.சுதர்சனாசாரியர், தமிழ்ப் பண்டிதர்,

டீசர்ஸ் காலேஜ், சைதாப்பேட்டை.

99

இந்திரமோஹனா என்னும் இந்நூலை இயற்றியவர் கோதைநாயகி என்பவர். இந்நூல் சீரிய நீதிகளைக் கொண்டு தெள்ளிய நடையில் ஹாஸ்ய ரஸம், சோக ரஸம் முதலிய ரஸங்களுடன் நடிப்பதற்கு யோக்கியமாயும், ஆண் பெண். ஆகிய இருபாலாரும் எளிதிற் கற்றுணரலாம்படியும் நன் கு எழுதப்பட்டுள்ளது. இடையிடையே காணப்பட்டுள்ள செய் யுட்களும் கீர்த்தனங்களும் கண்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேட்டார்தம் உள்ளம் உருக்குவனவாய் உள்ளன. இந்நாடகம் சிறுவர் சிறுமியர்கட்கு ஏற்ற நல்லொழுக்கத்தைப் போதித்து விழுமியோர்க்கும் விருப்பம் விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. மாதர்க்கும் மற்றையோர்க்கும் இன்றியமையாதனவாகிய சாமானிய நீதிகளின் ஏற்றத்தாலும் இதனுட் பொதிந்து கிடக் கும் பொருட் பொலிவின் உயர்வாலும் இலங்காநின்ற இந் நாடக நூலை இயற்றியவரை இந்நாடு முன்னேற்றமடையும் வண்ணம் மீண்டும் இத்தகைய முயற்சியில், ஊக்கத்தோடு உழைக்குமாறு உற்சாகப்படுத்துவதும் தவிர, இவரது நூலை வாங்கிப் படித்தும், நடித்தும் ஆனந்திப்பது ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் உற்ற அரும்பெருங் கடமையாகும்.

பண்டிதை - விசாலாக்ஷி அம்மாள், மயிலாப்பூர்.

"இந்திரமோஹனா" என்னும் தமிழ்ப் புத்தகம் வரப்பெற் றேன். படித்துப் பார்த்ததில் "நடை, சொல் நயம், அர்த்த புஷ்டி,சமயோசிதமானபாட்டு, மனோஹரமான சம்பாஷணை' ஆகிய இவைகள் ஒன்றோடொன்று உறவாடி உற்சாகத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/14&oldid=1559481" இலிருந்து மீள்விக்கப்பட்டது