பக்கம்:இந்திர மோகனா.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஸனா

123

இனி நான் என் செய்வேன்? இவளையடையவேண்டுமெனும் எண்ணத்தைக் கட்டோடு விட்டுவிட வேண்டியதுதான். அதை நினைக்கும்போதே என் மனம் பிளந்துவிடும்போலிருக் கிறது. (சற்று நிதானித்து) இவள் பிராணநாதன் யாராவதிருந்தால் என் படத்தை இவள் கையில் வைத்துக் கொண்டு தூங்குவானேன்? எதற்கும் இவள் எழுந்ததும் நேரில் கேட்டுப் பார்ப்போம்.

ஆ! !

வேறு

மோஹனா:- (விழித்துக்கொண்டு) இதென்ன இனிமையாய் யாரோ பாடுவதுபோல் கேட்டதே. இந்நிர்மா னுஷமான காட்டில் இவ்வளவு அழகாய்ப் பாடுகிறது யாரோ தெரியவில்லை. (படத்தைப்பார்த்து) பிராணநாதா ! உம்மை விட்டு நான் நித்திரை செய்துவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டும். ஆ! இதுவென்ன படத்தைப்போய் மன்னிப்புக் கேட்கிறேன்.என்நாதரைக் கண்டாலல்லவோ கேட்கவேண்

டும்?

ஜீவ:-(தனக்குள்) பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோ லாய்விட்டது. இவளும் என்மேல் காதல்கொண்டிருக்கிறாள். இன்னும் என்ன நடக்கிறது பார்ப்போம்.

அஸ்தமிக்கும்

மோஹனா :- பிராணகாந்தா ! பொழுது சமயமாயிற்று. இனி உம்மை நான் எங்குத் தேடுவேன்? (நாற்புறமும் சுற்றிப்பார்த்து) ஆ ! இதுவென்ன கனவோ ! நினைவோ! அல்லது சித்தப்பிரமையோ! என்னெதிரில் தோன்றும் உருவம் நிஜமோ அல்லது பொய்யோ? இவரைப் பார்த்தால் என் பிராணநாதர்போலிருக்கிறது. (படத்தையும் ஜீவனனையும் உற்றுப் பார்த்து) ஆம். இவர்தான் நான் அன்று கண்ட கண்ணாளன். என் மனத்தைக் கவர்ந்த மணவாளன். தேடப்போன மூலிகை காலில் சுற்றியது போல் என்நாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/140&oldid=1559608" இலிருந்து மீள்விக்கப்பட்டது