பக்கம்:இந்திர மோகனா.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

இந்திர மோஹனா

ரைக் கண்டுவிட்டேன். இனி இவரிடம் சேருவது எப்படி ? இவர் என்மேல் காதல் கொண்டாரோ இல்லையோ? அம்பா !

ராகம்: பைரவி.

எண்

தேவி நின்னருளால் என்தன் சபதமு முடிந்த தின்றே ஆவியை யளித்தவென்றன் அன்பர்தனருகில் சென்று தாவியே தாளைப்பற்றித் தன்னியனாவேன் அம்பா ! பாவியின் மனமும் இன்று பண்புற மகிழ்ந்ததன்றோ ? நின்னருளால் சோரர் கையினின்றும் தப்பி “ சர்க்க ரைப்பந்தலில் தேன்மாரி பொழிந்தாற்போல்" நாதர் கண் முன் நின்றேன்.- இனி யென்னை அவருடன் சேர்த்துவைப் பது உன்தன்பாரம். அவர் அருகில் சென்று என் அருகில்சென்று ணத்தை வெளியிட்டு என்னை யாட்கொள்ளும்படி வேண்டு கிறேன். நான் ஒரு புருஷனிடம் வலியச் சென்று அவ்வாறு சொல்வது நீதியா? (சற்று யோசித்து) இதிலென்ன தவறு? அவரைக்கண்டது முதல் அவரிடம் என்னுடல் பொருள், ஆவி மூன்றையும் ஒப்புவித்துவிட்டேன். இப்பொழுது அவர் என்னை ஏற்றுக்கொண்டால் சரி; இல்லாவிடில் அவர் முன் என்னுயிரை விட்டுவிடுகிறேன். (ஜீவனன் அருகில் சென்று)

ஹிந்துஸ்தானி. அசாவேரி ராகம்: ஆதி தாளம்.

என்தன் பிராண நாதரே உம்பாதமதைப் போற்றிநின்றேன் சிந்தைமிக நொந்துருகி வாடிச் சோர்ந்து உம்மைக் கண்டேன் அன்பரே நீர் இன்பமுடன் பேதை யென்தன் கைப்பற்றுவீர் முந்தி யொரு நாளெனக்கு நந்தவனந்தன்னில் வந்து விந்தையாய் உம்முருவந்தன்னைக் காட்டி மறைந்த

[கொற்றவனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/141&oldid=1559609" இலிருந்து மீள்விக்கப்பட்டது