இந்திர மோஹனா
125
ஜீவ:-(தனக்குள்) நான் கொண்ட காதலைவிடப் பதின் மடங்கு அதிகமாக இவள் என்மீது கொண்டிருக்கிறாள். என்பாக்கியமே பாக்கியம். இனி இவளை மணந்துகொள்ளா விடில் என்னுயிர் நிலையாது. ஆயினும் சற்று நிதானிப் போம். (பிரகாசமாய்) உம்.
மோஹனா :-ஹா ! ஈசா! பதிலொன்றும் காணோமே. என்னைத் திரஸ்கரித்து விடுவாரோ ! என் செய்வேன். (மூர்ச் சித்து விழுகிறாள்.)
ஜீவ:- ஐயோ ! நான் பதில் சொல்லாததனால் இவள் மனமுடைந்து மூர்ச்சையாய் விட்டாளே ! என்னமடத்தனம் செய்தேன்?
ராகம்: ஆனந்தபைரவி: தாளம்: சாபு.
பூவையே வருந்திட வேண்டாம் பிரியமுடன் என்னைத் தாவியே கரமளிப்பாயே யாவையும் படைத்தஈசன் மூவருமறியஉன் மேவிய மேனி தன்னை மாண்புடன் தீண்டிட்டேன் நான் அந்திப் பொழுதாகும் வேளையில் அன்னமே இங்குத் தனித்திருத்தல் நன்றோ மாதே உன்தனைவிட்டு வேறு எந்த மங்கையரையும் சிந்தையில் எண்ணேன் சத்தியம் தென்புடன் கண் விழிப்பாய். காந்தையே! எழுந்திரு; உன்னைக் கைவிடேன். இது சத்தியம்.(மெதுவாய்த் தட்டுகிறான்.)
மோஹனா:-ஆ! என்னை யார் தட்டியது? அம்மெல்லிய கரத்தின் மகிமையை என்ன வென்று சொல்வேன்? என் நாதர் தான் எழுப்பி யிருப்பார். (ஜீவனனை நோக்கி) நாதா! வாய்திறக்காம லிருப்பது நியாயமா?