பக்கம்:இந்திர மோகனா.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

ந்திர மோஹனா

"நந்தன் சரித்திர மானந்தம் "மெட்டு.

ராகம்: சங்கராபரணம். தாளம்: ஆதி.

நாதா மறுமொழியும் சொல்லலாகாதா இந்தவேளை தகாதா உங்கள் தாளைப்பணிய என்தன்

பாத கமலந் தன்னை நாடி வனந்தன்னிலே தேடி ஈசனைத் துதிப்பாடி உம்மை யடைய

(நா)

(நா)

பிராணநாதா ! ஒரு வார்த்தை சொல்லி

என்மேல்

கருணை கூர்ந்து காக்கலாகாதா?

ராகம்: ஸ்ரீரஞ்சனி.

ஜீவ:-வானவர் புகழ் மங்கையே

கண ண !

கானகந் தனிலிங்ஙனே

ஊனமற்ற நின் செங்கையை

நானு மொப்புவல் நங்கையே.

உன்னைக்கண்டதும் என்னாவியையே

உனக்குத் தத்தம் செய்துவிட்டேன்.

இனி உன்னைத் தவிர

வேறொரு ஸ்த்ரீயைக் கண்ணெடுத்தும் பாரேன். இது சத்தி யம்.(ஆலிங்கனம் செய்து கொள்கிறான்.)

மோஹனா:- பிராணநாதா! இன்றே நான் செய்த சப தம் நிறைவேறிற்று. நான் பெண்ணாய்ப் பிறந்ததின் பலனை யடைந்தேன். என் மாற்றாந்தாயின் சொல்லை மடித்தேன். நாதா! அஸ்தமன காலமாய் விட்டதே.

ஜீவ:- கண்ணே ! என்னை நீ எந்த நந்தவனத்தில் கண்டு காதலுற்றாப்? உன் சபதம் யாது?

மோஹனா:- ஒன்றையும் விடாமல் சொல்கிறேன். முதலில் இருட்டுவதற்குள் ஏதாவது ஒருகிராமத்தை யடைய வேண்டும். இத்தனை நாள் காட்டில் அலைந்தது போதும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/143&oldid=1559611" இலிருந்து மீள்விக்கப்பட்டது