இந்திர மோஹனா
129
என் ஞானதிருஷ்டியா லறிந்து அப்பாதகனைப் பஸ்மஞ் செய்கிறேன். பத்மபுரி மன்னனென்றால் பல மன்னரும் பதுங்குவரே; அப்படிப்பட்ட வீரனை வஞ்சகமாய்ச் சிறை யிட்ட பாவியை அதஞ்செய்கிறேன். அடே பிரதானி! நீயும் இதற்கு உடந்தையா யிருந்தாயல்லவா? இதோ உங்கள் எல் லாரையும் நாசமாக்குகிறேன்.
சர: (தனக்குள்) ஐயோ! இந்த ஆபத்திற்கு என் செய் வேன்? அப்பாழ் மன்னனும் மந்திரியும் செய்து செய்து விட்டு என் கழுத்தில் கத்தியை நாட்டி விட்டார்களே. இம்முனிவருக் கிருக்கும் கோபத்தைப் பார்த்தாற் சபித்து விடுவார் போலீ ருக்கிறது. நடந்ததைச் சொல்லி மன்னிப்பு கேட்டுப் பார்க்கி றேன். (யோகியின் காலைப் பிடித்துக்கொண்டு பிரகாசமாய்) முனீந்த்ரரே! அடியேன் ஒரு பாவமும் செய்திலேன். அடி யேன் செய்யும் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருள
வேண்டும்.
(ஐயா வேதியரே மெட்டு.)
ஐயா பெரியவரே என்னைக்காவும் யோகியரே மெய்யா எனக்கு ஒன்றும் தெரியாதென்னையனே துஷ்டனான மன்னன் செய்த வேலையாவுமே.
(ஐ)
பத்மபுரி அரசனையே பாவி சிறை வைத்து அவர் பத்தினியைப் பெண்டாளப் பதறிச் சென்றானாம். (ஐ)
முனிபுங்கவ! நான் வெளியூரிலிருந்து நேற்றிரவு தான் திரும்பி வந்தேன். அப்போது தான் இம்மன்னனைச் சிறை வைத்து, இளவரசனைக் கொன்று, பத்தினியைப் பெண்டாளச் சென்றதைக் கேள்விப்பட்டேன். எனக்குத் தெரிந்ததைச் சொல்லிவிட்டேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
9