130
இந்திர மோஹனா
நித்:- ஏான் சொல்லுகிறபடி செய்; மன்னிக்கிறேன். இந்த அறையின் கதவைத்திற. (சரசன் கதவைத்திறக்க, யோகி உள்ளே சென்று பத்பநாபரைத்தட்டி யெழுப்பி) மன் னரே! எழுந்திரும். உமது கஷ்டம் இன்றோடு தொலைந்தது. உம்மைச் சிறைவைத்த பாவி மாண்டானென்று நினையும். சீக்கிரம் எழுந்திரும். உமது நாட்டை அடைவோம்.
பத்ம: (மெதுவா யெழுந்து) இச்சண்டாளனிடமிருந்து என்னை மீட்க வந்த மாமுனிவரே! நமஸ்கரிக்கின்றேன். (கா லைப்பிடிக்கப் போகையில் யோகிகள் தடுத்து)
போதும்.
நித்:- மன்னா! நமஸ்கரிக்கின்றேனென்று சொன்னால் நான் ஏற்றுக்கொண்டேன். நேரமாகிறது. புறப் படும். போவோம். (சரசனைப் பார்த்து) பிரதானி ! சீரும் என்னுடன் பத்மபுரிக்கு வாரும். (நால்வரும் போகிறார்கள்.) இரண்டாவது களம் முற்றிற்று.
தான்காவது அங்கம். மூன்றாவது களம். இடம்:- தேவகியின் அந்தப்புரம்; காலம்.இரவு.
(தேவகி சோகத்தோடு பிரவேசித்தல்.)
தேவகி:ஹா!மைந்தா!
ராகம்: காபி: ஏகதாளம்.
பொறுக்குமோ ஐயையோ என் தனுயிர் தரிக்குமோ மகனே - பொ- செல்வனே-பொ-சுதனே - பொ அரவிந்தா என்தனுயிர் தரிக்குமோ ?
வசனம் ஷ ராகத்தில்
பட்டம்கட்டிப் பாவியேன் கண்டுகளித்து உன்னைக் கட்டியணையக் கோரிய ஜெஞ்சம்