பக்கம்:இந்திர மோகனா.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

131

ஷை மெட்டு.

வேகுதே அரவிந்தா பாகாயுருகுதே

கண்மணி வேகுதே அப்பனே வேகுதே மைந்தனே! பாகாயுருகுதே.

என்

எவ்வளவு பெரிய கட்டடம் தீப்பற்றிக் கொண்டாலும் அதை ஒரு நொடியில் அவித்து விடுகிறார்களே. ஒரு சாண்குட்சியின் தணலை அவிக்க முடியவில்லையே. ஈசா ! என்மகன் சென்ற இடத்தில் என்னைச் சேர்த்தாலல்லது இத் தணல் அவியாது. உன் கடைக்கண்ணால் என்னைக் கடாக்ஷிக்க லாகாதா?

ராகம்:லஹான.

கண்டிலை யோயான் படும்பாடெல்லா மூன்று கண்ணிருந்துந் தெரியாதோ கசிந்துள்ளன்பார் தொண்டரடித் தொண்டனன்றோ கருணை நீங்காய் சுத்தபரிபூரணமாஞ் சோதிநாதா!

ஐயோ! மன்னன் சென்று இத்தனை நாளாகியும் ஒரு சேதியும் கிடைக்கவில்லையே. நீங்களிருவருமில்லாச் சமய மறிந்து யாரோ நம்மூர்மீது படையெடுத்து வருவதாகப் பிரதானி சொன்னாரே. இனி என்செய்வேன்?

ராகம்: முகாரி.

அப்பனே மகனே யென்றே அலற்றிட விதியுமாச்சோ எப்படா காண்பே னென்றே ஏங்கிடக் காலமாச்சோ தப்பிநீ பிழைப்பாயென்று தவித்து நானுயிரை நீக்கா தொப்பியே சுமந்தேன் பாலா உன்னையோ காண்கிலேனே!

இனி ஒருநிமிஷமும் உயிர்தரித்திரேன். இரவு ஆக ஆக என் மனத்தின் சோகம் அதிகரிக்கின்றது. (நேபத்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/148&oldid=1559616" இலிருந்து மீள்விக்கப்பட்டது