132
இந்திர மோஹனா
தில் ஜயகோஷம் கேட்கத் திடுக்கிட்டு) ஹா ! முடிந்துவிட் காலையில் பிரதானி சொல்லியவாறு எவனோ படை
டது.
யெடுத்து வந்தவன் ஜயபேரிகை யடிக்கிறான்.
!
ஆ! மைந்தா! இவ்வேளை நீ ஓடிவந்து என்னைக் காப்பாற்றி நம் ராஜ்யத்தை மீண்டும் கைப்பற்றுவாயோ?
ராகம்: நீலாம்புரி.
அலற்றினால் வருவாயோ என்னாருயிர்ச் செல்வனே நான் ஜலத்தினில் குமிழிபோலத் தவிப்பது தகுமோ செல்வா குலத்தை யான் விளக்கவந்தேன் குறையுறேல் அன்னை
[யென்றே
பலத்த தோர் கூச்சலிட்டுப் பாவிமுன் வந்திடாயோ?
(மறுபடியும் நேபத்யத்தில் "ஐயையோ! என்ன செய் வோம்? தப்பிப் போகவும் வழியைக் காணோமே. ராணியார் அந்தப்புரத்திற்குள் அம்மன்னன் போர்வீரருடன் போகி றானே, அம்மையார் என்ன செய்வார்? )
தேவகி:-(நிலைகலங்கி) ஆ! இதுவென்ன அநியாயம்? ஈம்மரண்மனையிலுள்ளவர்க ளெல்லாம் இப்படி கூக்குரலிடுகி றார்களே? நம் அந்தப்புரத்திற்குள் எவனோ வருகிறானாமே! ஐயோ! நானென்ன செய்வேன்?
(கலிங்கனும் போர்வீரரும் பிரவேசித்தல்)
கலிங்கன்:-வீரர்காள் ! நீங்கள் இங்கே வெளியில் காவ லிருந்து உள்ளே யாரும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். போர்வீரர்கள்:-மகாராஜா! சித்தம். (போகிறார்கள்) கலிங்கன்:- (தேவகியை உற்றுநோக்கி)