xii
யும், ஊக்கத்தையும் விளைவித்தன.
நவரஸம் நிறைந்துள்ள இந்த நவீன நாடகத்தை எழுதியவர் ஸ்ரீமதி கோதைநாயகி என்பவர். இராஜாங்கங்களை யமைத்து அரசர்களை ஏற்படுத்தி அவர்கள் மக்களுக்கு வீரம், கஷ்டம் முதலியவைகளில் அனு பவங்களை உண்டாக்கி ஹாஸ்ய விநோதங்களை ஆங்காங்கு விடாமல் சேர்த்து அழகிய புஸ்தகமாய் வெளியிட்டுள்ளார். இந்தக்கிரந்த கர்த்தர் மேன்மேலும் தமிழ் நாட்டாருக்கு புஸ் தகமெழுதி உபகரிக்கும்படி மனஸ் சந்துஷ்டியுடன் தெரிவிக் கிறேன்.
வ
Sister. V. Balammāl, Journalist & Authoress. Mylapore:- இந்திர மோஹனா"
இப்பெயர்கொண்ட தமிழ் நாடகம் மிக நன்றாக எழுதப் பட்டிருக்கிறது. நடிப்பதற்கும் மிகப்பொருத்தமா யமைந் திருப்பது சிலாகிக்கத்தக்கது. நமது சகோதரிகள் இலக்கியத் துறையில் இறங்கி உழைக்க முன்வந்திருப்பது பெரிதும் பாராட்டத்தக்கது. இந்தியப் பெண்மணிகள் தக்க ஆதரவு கிடைக்கும் பக்ஷத்தில் எல்லாவழிகளிலும் விரைவில் முன் னேற்றமடைந்து விடுவார்கள் என்பதே என தபிப்பிராயம். ஒழிந்த நேரங்களில் வீண்பொழுது போக்காமல் இவ்வாறு நற்பொழுது போக்க முன்வந்த ஆசிரியை, ஸ்ரீமதி கோதை நாயகியின் முயற்சியைக் கொண்டாடுகிறேன். நல்ல தமிழ் நடையில் நாடகத்திற்கு வேண்டிய பாக்கள், பாட்டுக்கள், ரஸங்கள் இவை சற்றும் குறைவின்றி எழுதப்பட்டிருக்கும் இந்நாடகம் எல்லோராலும் ஆதரிக்கப்படுமானால் ஆசிரியர் மேன்மேலும் இவ்வாறு பல கிரந்தங்கள் எழுதி வெளியிட உற்சாகம் கொள்வார் என்பது நிச்சயம்.
தமிழ்நாட்டிலுள்ள ஸ்திரீ வித்தியாபிமானிகள் ஒவ் வொருவரும் ஆசிரியரின் ஊக்கத்தை அபிவிருத்தி செய்தல் கடமையாகும்.