பக்கம்:இந்திர மோகனா.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

("திருவொற்றியூர் என்பது இதுதானோ "மெட்டு.)

தேவகியென்பவள் இவள்தானோ

மேவிநான் வந்தவள் இவள் தானோ அரவிந்தனை யீன்றாள் இவள்தானோ

அரண்மனைக் கதிபதி இவள்தானோ

133

ஆ, ஆ! இவள் எவ்வளவு விசனத்தி லிருந்தாலும் இவ ளது எழில் சிறிதும் குன்றவில்லையே.

கண்மணி! என் தூர நிற்கின்றாய்? என்மனத்தைக் கொள்ளைகொண்ட கோகிலமே! (அருகில் சென்று கரத்தைப் பற்றப்போகிறான்)

தேவகி: (விலகிநின்று)

(நகுமோமுகனலேனி மெட்டு.)

ராகம் ஆபோஹி தாளம்-ஆதி.

பல்லவி.

தகுமோ இவ்வனியாயம் தரணியில் வேந்தனே ஈசனடியைத் தொழுவாய் இன்பமுடனே நீ

அனுபல்லவி.

(த)

வெகுவாய் நீ தலை துள்ளும்வீரியம் நிலைநிற்குமோ மானஹீனமான வேலையை முனைந்து செய்யாதே. (த)

சரணம்.

மகனை யிழந்து வருந்துமிப் பேதையை

கலிங்கன் :-(மேல் சொல்வதற்குள் ஆத்திரத்துடன்) காதற்கிளியே இவ் வீண் பேச்செல்லாம் இப்போது எதற்கு? போனதை நினைத்து வருந்தாதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/150&oldid=1559618" இலிருந்து மீள்விக்கப்பட்டது