இந்திர மோஹனா
"ராமபாண" மெட்டின் சரணம்.
சந்திர முகத்தினளே என் தாபத்தை சிந்தை மகிழ்வுடன் தீர்த்து அணைந்து என்தனுக்கே தருவாயோர் முத்தம் சமயமிதுவே நங்காய்!
135
தேவகி: (மேலே பாடவிடாமல்) அடா! மன்னனென்று பெயர் வகித்த மறலியே ! இப்பவும் நான் கடைசித்தரம் சாந்த மாய்ச் சொல்கிறேன்.
(ப்ரோவசமய மெட்டு.)
ராகம்: கௌரி மனோஹரி: தாளம் ஆதி.
பல்லவி.
போகச்சமயம் ஈதே யுனக்கு
அனுபல்லவி.
மோகத்தாலே நீ முறிந்தலைய வேண்டாம் பாவமே யன்றியில் பின்னில்லை யுனக்கு.
சரணம்.
முந்திசெய்த வினையாவும் உன்தனக்குப் பிந்திவந்தணுகும்பேதைமை யொழித்து அந்தி பகலாய் அரியைத் தொழுவாய் மந்தியைப் போலவே மயங்காமலே நீ.
(போ)
(போ)
(போ)
கலிங்கன்:- (நகைத்து) உம். பாவமாம். புண்ணியமாம்.
துக்டா : தாளம். ஏகம்.
பாவ புண்ணியம் கண்டவன் யார் ? பக்தி மார்க்கம் கொண்டவன் யார்? மோக்ஷ ஸாரம் கண்டவன் யார் ? மங்கைமோஹம் விட்டவன் யார் ?.