பக்கம்:இந்திர மோகனா.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




136

இந்திர மோஹ்னா

தேவகி:- சிச்சீ! வாயைமூடு.என்நாதர் வந்தால் உன்னை வெட்டி வீழ்த்துவார். மரியாதையாய் ஓடிவிடு.

கலிங்கன்:- உம். என்னாசைக்கண்ணாட்டி! உன் நாதனா என்னை வெட்டுபவன்? இதோ இக்கிரீடம் யாருடையது பார்? உன்னை யடையும் பொருட்டு உன் மைந்தனையும் மன்னனையும் கொன்றேன். இனி என்னைத்தவிர உன்னைக்காக்க வேறொரு வருமில்லை.

தேவகி: (கிரீடத்தை உற்றுநோக்கி) ஹா ! இது என் மன்னனுடையதே. ஐயோ! அவரையும் இழந்துவிட்டேனா? ஆ! பிராணநாதா! (கீழே விழுந்து புலம்புகிறாள்.)

66

(தில்லையம்பல ஸ்தல மொன்றிருக்குதாம் மெட்டு.) 1.என்ன செய்வேன் ஏதுசெய்குவேன் - ஈசனே ! மன்னனும் மடிந்தாரென்றானே.

2. ஐயையோ என்னாவி துடிக்குதே - என்னையனே ! வையகத்தில் பாவியானேனே.

3. மாரியில்லாப் பயிர் போலானேனே-மகனே ! வாரில்லாத மேளமானேனே.

4. திரை புரளும் கருங்கடல் தன்னில் - துரையே! கரைகாணாமல் கலங்கி நிற்கின்றேன்.

கலிங்கன்:- அன்பினுருவே! ஆசைக்களஞ்சியமே ! ஆண்டாண்டு தோறும் அழுதுபுரண்டாலும் மாண்டார் வருவரோ " என்றபடி போனவர்களைப்பற்றி இனி புலம்பி யாது பயன்? நான் இருக்கும் வரை உனக்கு ஒரு குறைவு மில்லை. என் கருத்துக்கு இசைந்துவிடு. (அவளை ஆலிங்க னஞ் செய்யப் போகிறான்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/153&oldid=1559621" இலிருந்து மீள்விக்கப்பட்டது