இந்திர மோஹனா
137
29
தேவகி. துடி துடித்து அழுதகண்ணும் தொழுத கையுமாய்) ஏ அநாதரக்ஷகா!" ஹாக்ருஷ்ணாத்வாரகாவாஸ என்ற த்ரௌபதியின் மானத்தைக் காத்தருளிய கருணை வள் ளலே ! இப்பேதையின் கற்பை இத்தருணம்,
("நடந்ததென்ன சொல்லம்மா" மெட்டு.)
1.
காக்கவரவேணும் - என்னை
கார்முகில் வண்ணா !
(கா)
2.
பாற்கடல் தன்னில் பத்மினியுடனே
பள்ளிகொண்ட ஸ்ரீ பரமதயாளா!
வேரற்ற மரம்போல் விழுந்து விம்முறும்
பாவியை இவ்வேளை
(கா)
3. மைந்தனை யிழந்தேன் மன்னனைத் துறந்தேன் மாநிலந் தன்னையும் மாபாவி தோற்றேன் பன்னகசயன! பேதையின் மானத்தைப் பிரியமுடன் இவ்வேளை
(கா)
ஆபத்பாந்தவா! தாமரையிலைத் தண்ணீர் போல் என்னாவி துடிக்கின்றதே. என் சோகாக்கினி ஒருபக்க மிருக்க இப் பாவி மோகாக்கினியால் மொழியும் வார்த்தைகள் என் மனத்தை ஏககாலத்தில் ஆயிரம் வாள் கொண்டு அறுப்பது போலிருக்கின்றன. ஆதிமூலமே!
ஷை சரணம்.
பாவிக் கலிங்கன் பெண்டாள வென்னைச் சண்டாளன் மனத்தில் தோற்றியே வந்தெனைத் தாவியே கரத்தை மேவி பற்றவரும்
பாதகனைக் கொல்வாயே.
(கா)
ஐயோ! பாவியேன் என் செய்வேன்? எங்குய்வேன்? யாரிடம் முறை யிடுவேன் ? கோரிய கடவுளே! பாவி நான் செய்த