138
இந்திர மோஹனா
பாவத்திற்கேற்றவாறு தாங்கள் செய்த சிக்ஷைக்கெல்லாம் உட்பட்டேன். இக்கொடும் பாவியின் சொற்களைக்கேட்க முடிய வில்லையே. என்னை இவ்விதம் பரீக்ஷிக்க வேண்டுமா? இத் தருணம் அடியாளைத் தம் திருவடியில் சேர்த்துக் கொள்ள லாகாதா? இப்பாவி கத்துகிறாள், கதறுகிறாள், துடிக்கிறாள், தபிக்கிறாள், என்று இவ்வேளை ஈசா! உம்மிடம் யார் போய் சொல்வார்?ஆ! மன்னா! மைந்தா! (மூர்ச்சையாகிறாள்).
கலிங்கன்:-காதற் கிளியே! விலையில்லா மாணிக்கமே! நீ இவ்வாறு மூர்ச்சித்திருப்பதை நான் கண்டு சகிப்பேனா ? இதோ உன் மூர்ச்சையைத் தெளிவிக்கிறேன்.
நித்யானந்த யோகிகள்:-பரபரப்புடன் பிரவேசித்து) அடே சண்டாளா! என்ன வார்த்தை சொன்னாய்?
ராகம் - மோகனம்.
ன
காதகா உன்னை இன்னே கண்டதுண் டாக்குகின்றேன் பாதகா பயந்தாள் தன்னைப் பண்புறப் பெண்டாளற்கு வாதமே புரிந்திம்மாதை மருவிட வருநின் மெய்யைச் சாதகத்தோடுமின்று சதித்திட்டேன் காண்பாய்நீயே. அடே கொடுங்கோல் மன்னா! பரஸ்த்ரீகளைக்கற்பழிப்பதோ உன் ஆண்மைக்கழகு? காமாந்தகாரமான நரகில் விழுந்து உன் வாணாளை வீணாளாக்கிக்கொண்டாயே? அடே விஷப் பூண்டே! உனது கொடிய செயலின் பயனை இதோ அனுப விக்கப் போகின்றாய்.
கலிங்கன்: (மீசை துடிக்க ஆத்திரத்துடன் வாளை உரு விக்கொண்டு) யாரடா நீ ஆண்டிப்பதரே! என் மனையாட்டி யுடன் நானிருக்கும் தருணத்தில் சற்றேனும் மதியில்லாமல் உள் நுழைந்ததுமன்றித் தாறுமாறாய்ப்பிதற்றுகின்றாயா? என்