இந்திர மோஹனா
139
னையா நீ வெட்டப்போகின்றாய்? இதோ உன்னை இவ்வாளுக் கிரையாக்குகின்றேன்? (வாளை ஒங்கும் சமயம் பத்மநாபர் சரசருடன் பிரவேசித்தல்.)
பத்மநாபர்:-அடா துரோகி ! என்ன சொன்னாய்? உன் மனையாட்டியா? அதமாதமா! என் பத்தினியைக் கற்ப ழிக்க வந்ததுமல்லாமல் உன் வாய் கூசாது என்மனையாட்டி யென்று உளறிய நாவை இந்தக்ஷணம் செதுக்குகின்றேன்.
கலிங்கன்
பத்மநாபரையும் சரசரையும் கண்டதும் திடுக்கிட்டு இடியுண்டநாகம்போல் திக்பிரமையாய் நிற்கிறான்.)
சரசன்:- ஆ மன்னா! "கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும்முன்னே" என்பது உங்களுக்கே பொருந்திவிட்
டது.
பத்ம:- (நித்யானந்தரைப் பார்த்து) முனிபுங்கவ! தாங் கள் இப்பாவியைத் தக்கசமயத்தில் பிடித்துக் கொடுத்ததற்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகின்றேன்.
நித்யா - மன்னா! தாங்கள் எனக்குச் செய்யவேண்டிய கைம்மாறு தங்களது வாளினால் இப்பாதகனைத் தாக்ஷிணிய மின்றி நான் வெட்ட அனுமதிதருவதே.
பத்ம:-ஆ! அப்படியே. (வாளைக் கொடுக்கிறாள்.)
கலிங்கன்:- (தனக்குள்) "தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்" என்றது எனக்குப் பலித்தது. அரசனைச்சிறையில் வைத்து, இளவரசனைக் கொன்று, உத்தமி யைப் பெண்டாள நினைத்ததின் பலன் (அதற்குள் நித்யானந்த யோகிகள் அவனை வாளினால் வெட்ட) ஆ ! மாள்கிறேன்,மாள் கிறேன். (விழுந்து இறக்கிறான்.)