140
இந்திர மோஹனா
பத்ம - (தேவகியருகில் சென்று மூர்ச்சை தெளிவித்து) பிராணநாயகி ! எழுந்திரு. அப்பாவி கலிங்கன் ஒழிந்தான்.
தேவகி:ஆபாதகா!
தேவகி:-ஆ! பாதகா! என்நாதரின் குரலைப் போல் வைத்துக்கொண்டு பேசுகிறாயா ? ஐயோ! இனி என் மன் னனை நான் காணப் போகின்றேனா?
பத்ம:- இன்னும் அப்பாவியின் பயமே இவளைப்பாதிக் கின்றது; தேவகி ! பயப்படாதே; நான் இறக்கவில்லை. கண் திறந்து பார். நான்தான் உன் பக்கலில் நிற்பது.
தேவகி:- (கனவு கண்டவள் போல் பதைத்து எழுந்து, பத்மநாபரை உற்றுநோக்கி) ஆ! பிராணநாதா ! நான் காண் பது கனவோ ! நினைவோ?
பத்ம: நாயகி !
காண்பது கனவல்ல. நினைவே.
இதோ நிற்கும் முனிச்ரேஷ்டரின் அருளினால் நானும் சிறை தப்பி உன்னையும் கண்டேன். எழுந்து அவரை நமஸ்கரி. நமது அரவிந்தன் எங்கே? கூப்பிடு. அவனையும் நமஸ்கரிக்கச்
சொல்வோம்.
தேவகி:- (எழுந்து) ஆ ! பிராணேசா! உம்மைக்கண்டு நான் ஒருவாறு மகிழ்ந்தாலும் அரவிந்த னென்கிற போது என்வயிறு பகீரென்கிறதே. இனி அவனைக் காணப்போகின் றோமா? பாவிகலிங்கன் அவனைக் கொன்று விட்டானே.
கிய
பத்ம:- (திடுக்கிட்டு) ஹா என் மைந்தா! நீயோ விண் ணுலகம் புக்கனை? ஐயோ! உன் ஒருவனாலன்றோ எங்களுக்குக் களிப்பு. எங்களை விட்டு நீ செல்வது தகுமோ? கண்ணா உன்னை இழந்துவிட்டுக் குருடர்களாகிய நாங்கள் எதற்கு இனி உயிர் வாழ்வது? (மூர்ச்சையாகிறார். எல்லோரும் மூர்ச்சை தெளிவிக்கிறார்கள்.)