பக்கம்:இந்திர மோகனா.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

141

ஏற்

சரசன்:-மன்னா ! இனி வருந்திப் பயன் யாது கனவே அரசியம்மா நலிந்திருக்கிறார்கள். தாங்கள் வருந்தி னால் அவ்வம்மைக்கு இன்னும் துயர் அதிகமாகும்.

நித்யா:- ராஜன் ! போனதைப்பற்றி வருந்தி யாது பயன் ? மனதைத் தேற்றிக்கொள்ளும். நான் வந்த வேலை யாய்விட்டது. எனக்கு விடைகொடும், போய்வருகிறேன்.

பத்ம:-மகரிஷியே! தாங்கள் எங்களுக்குச் செய்த பேருதவிக்காக நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன். தாங்கள் இக்குடிசையில் கொஞ்சநாளாவது தங்கியிருக்கும்படி பிரார்த்திக்கிறேன்.

நித்யா:- அப்படியல்ல. நான் கலிங்கனது துஷ்க்ருத் யங்களைக்கேட்டு அவனைத் தண்டிக்கவந்தேன். அது முடிந்து விட்டபடியால் நான் போகவேண்டும். தயவுசெய்து விடை யளிக்கவேண்டும்.

பத்ம:- சரி. இத்தருணமில்லாவிட்டாலும் மற்றொரு முறையாவது இங்கு எழுந்தருள வேண்டும். (தேவகியைப் பார்த்து) நாயகி ! அவரை நமஸ்கரி.

தேவகி:- முனிபுங்கவ! தங்களருளால் என்னாயகனைக் கண்டேன். இனிநான் இவ்வுலகை நீத்து என்மைந்தனிருக்கு மிடம் சேருமாறு ஆசீர்வதிக்கக்கோருகிறேன். (நித்யாநந்த யோகிகளை நமஸ்கரிக்கப் போகையில் யோகிகள் தடுத்து),

நித்யா:- அம்மா! தங்கள் புத்திரனிடம் சேருமாறு இதோ ஆசீர்வதித்தேன். (ஆலிங்கனஞ் செய்துகொண்டு) வருந்தாதீர்கள். தங்கள் புத்திரனைச்சேர்ந்து விட்டீர்கள்.. (சந்யாசி உடையைக் களைந்துவிடுகிறார். எல்லோரும் கண்டு வியந்து நிற்கிறார்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/158&oldid=1559626" இலிருந்து மீள்விக்கப்பட்டது