142
இந்திர மோஹனா
தேவகி:- அரவிந்தனை உற்றுநோக்கி)
ஹா! இது வென்ன! என் அகக்கண்ணால் காண்கிறேனா அல்லது புறக் கண்ணால் காண்கிறேனா?
அரவிந்தன்:- அம்மா ! இனி துயரம் வேண்டாம். சான் தான் தங்கள் அருமைமகன். நமக்குவந்த கஷ்டமெல்லாம் இறைவனருளால் இரவியைக்கண்ட பனிபோல் போய்விட் டது. அதோ ஆதித்தனும் உதயமாகும் வேளையாய்விட்டது. அப்பா! நமஸ்கரிக்கின்றேன். இப்பொழுது என்னை ஆசீர் வதிப்பதே சிறந்த கைம்மாறு ஆகும். (சரசரைப்பார்த்து) சரசரே! உம்மான்றே என்தாய் தந்தையரைக் கண் கண்டேன். (பத்மநாபரும் தேவகியும் அரவிந்தனை ஆலிங்கனஞ்செய்து கொள்கிறார்கள்)
இருவரும்:--குமரா! எங்கள் வயிற்றில் பாலைவார்த்
தனையே.
நான்
அரவிந்தன்:- என்னருமைத் தாய்தந்தையரே ! உங்கள் அனுமதியின்றி ஒரு காரியம் செய்துவிட்டேன். அதற்கு என்னை மன்னித்து அனுமதியளிக்கக் கோருகிறேன்.
இருவரும்:-அப்பா ! அப்படிப்பட்ட காரியம் என்ன செய்துவிட்டாய்! இத்தனை நாள் எங்களை விட்டுப் பிரிந்து எங்கிருந்தாய்?
அரவிந்தன்: -அம்மா! கடவுளருளினால் கானகத்தில் ஒரு கன்னியைக் கண்டு காதலுற்று இருவரும் மன மொத்து கடிமணம் செய்து கொள்வதாய் வாக்குறுதி செய்து கொண்டோம். அதை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொன் கிறேன்.