பக்கம்:இந்திர மோகனா.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சாற்றுக்கவி.

Mr. C. R. Namasivaya Mudaliar,

Tamil Pandit, Queen Mary's College, Madras.

and Chairman, Tamil Board of Examiners, Madras University.

மானிலத் தமரும் மாந்தர் தமக்குத்

தேனினு மினிக்குந் தென்றமிழ் தன்னின் நாடக நூலே நலம்பயப் பதெனா

நீடிய அறிவின் நினைந்து நவரசப் பாங்கு விளங்கவும் பண்பு நீடவும் தேங்கிய இன்மொழித் தெளிவு காணவும் படிக்குநர் உள்ளம் பரிந்து மகிழவும் வடித்த நன்னெறி வகைநன் கோங்கவும் தெள்ளிய நடையில் சிறந்து விளங்க ஒள்ளிழை மகளிர் உவந்து மேற்கொள இளையாள் வலையில் எய்திய மயக்கால் தளையவி ழாத தந்தையை நீத்துக் காட்டினிற் சென்றுதன் காதனா யகனை வேட்டு மணந்து விளங்குறு கற்பின் நிலையை நாட்டிய நேரிழை யொருத்திதன் விலையில் கதையின் விரிவைத் தெரிக்கும் இந்திர மோஹனா என்னும் நூலினைத் தந்தனள் கல்வித் தகைமை வாய்ந்து

று

பெண்மைக் குணமெலாம் பிறங்கப் பெற்றே எண்ணருஞ் செயலெலாம் இயல்பின் வாய்ந்த கோதை நாயகி என்னும்

மாதர்க் கரசி யாகுநன் மணியே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/16&oldid=1559483" இலிருந்து மீள்விக்கப்பட்டது