பக்கம்:இந்திர மோகனா.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

143

தேவகி:- என்னாருயிர்ச் செல்வா ! மெத்த சந்தோஷம். வழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. எங்கே உன் காதலி? நாம் பார்ப்போம்.

அரவிந்தன் :- அம்மா ! நம்மரண்மனையிலேயே தான்

இருக்கிறாள்.

தேவகி:- வா, போய் பார்ப்போம்.

(எல்லாரும் போகிறார்கள்.)

மூன்றாவது களம் முற்றிற்று.

ஐந்தாவது அங்கம்.

இடம்: பத்மபுரி அரண்மனை.

காலம்: காலை.

(அனேக அரசர்கள் நிறைந்த சபையில் அரவிந்தனும் மோஹனாவும் சிம்மாஸனத்தில் வீற்றிருந்தபடி பிரவேசம்.) பத்மநாபர்:- சபையோரே ! ஈசனது அருளால் மலை போல வந்த கஷ்டங்கள் பனிபோல நீங்கிவிட்டன. எனக்கு வயதாகிவிட்டபடியால் என் மைந்தனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்ய ஏற்பாடாயிருக்கிறது. அதோடுகூட அவன் காட்டி லலைந்தபோது ஒரு கன்னியைக்கண்டு அவளை மணப்பதாக வாக்களித்திருப்பதால் அவ்விவாகத்தையும் இப்பொழுதே நடத்தலாமென்றிருக்கிறேன். நீங்கள் இக்காரியத்தை நடப் வித்துத் தம்பதிகளை ஆசீர்வதிக்க வேண்டும்.

குணசேனன்:- (தனக்குள்) நான் இம்மணப்பெண்ணைக் காணும் போதெல்லாம் மோஹனாவின் நினைவு வருகின்றது. ஐயோ! சித்ராங்கியின் வலையிற் சிக்கி என்கண்மணியை உயிருடன் இழந்துவிட்டேன். நான் ஏன் இங்குவந்தேன்? ஹா! என் மோஹனாவின் மனத்தின்படி செய்திருந்தால் இவ் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/160&oldid=1559628" இலிருந்து மீள்விக்கப்பட்டது