148
இந்திரமோஹனா.
(மோஹனா மாலையை அரவிந்தன் கழுத்திலிடுகிறாள்.)
சபை
பயோர்.- ஆ, ஆ! வெகு ஆச்சரியம். ஜயவிஜயீபவ. குணசேனன்:-பரபரப்புடன் எழுந்து) ஆ! என் கண் மணி மோஹனா ! என் வயிற்றில் பாலை வார்த்தாயே. (மோஹ னாவைத் தழுவி முத்தமிடுகிறான்.) பத்மநாபரிட மிருந்து பத் திரிகை வந்தபோதே என் மனதில் ஒருவித உற்சாகம் உண் டாயிற்று. ஆயினும், நான் உன்னை மறுபடியும் உயிரோடு காண்பேனென்று கனவிலும் கருதவில்லை.
மோஹனா:-அப்பா! சித்தி எங்கே ?
குண: ண -கண்ணே ! உன்னைக் கெடுக்க நினைத்த காதகி காலவசமானாள்.
மோஹனா : ஐயோ! சித்தி ! போய்விட்டாயோ? என் தந்தைக்கு அந்திய காலத்தில் துயரத்தை வைத்துவிட் டாயே. (கண்ணீர் விடுகிறாள்).
குண:-(மோஹனாவைப் பார்த்து) என் செல்வமே ! உன்னை அல்லல்படுத்திய சித்திராங்கிக்காகவோ அழுகிறாய்? நம்மைப் பிடித்த சனி அன்றோடு ஒழிந்தது.
சாகரிகா:-(விதூஷகருடன் பிரவேசித்து) அம்மணி! தங்களை மறுபடியும் காணும்படியான பாக்கியம் பெற்றேனே! (தழுவிக் கொள்கிறாள்.) அம்மா ! ஏன் கண்ணீர் விடுகிறீர்கள்? விதூ :--ஆ ! இளவரசி யம்மா! தங்கள் திருமண வடை சாப்பிட நல்ல புண்யஞ்செய்து வந்துவிட்டேன். (குண சேனனைப்பார்த்து) மஹாராஜா ! நமஸ்காரம்.
மோஹனா:-என்னருமை சாகரிகா! சிற்றன்னை இறந்து விட்டாளாம். அதுதான் வருத்தமாயிருககிறது.
சாகரிகா, விதூஷகர்:- ஹா! அப்படியா! ப்ரபோ ! என்ன கஷ்டம்?
குண:-விதூஷகரே! அச்சித்திராங்கி இறந்ததா விச னம் என்கிறீர்? உம்மாலல்லவோ உண்மை யறிந்தேன். ஈசனது அருளால் என் மோஹனாவைக்கண்டு களித்தேன்.