150
இந்திரமோஹனா.
டொன்று பேசுவதைக் கண்டேன். ஆகையால் அவ்விருவ ருக்கும் இங்கேயே மணம் செய்வித்துக் கலிங்க நாட்டை அவ. ருக்கு முடிசூட்டவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். சபையோர்:- மெத்த சந்தோஷம்.
(சாகரிகா சரசனுக்கு மாலையிட, பத்மநாபர் கலிங்கனது மகுடத்தைச் சரசனுக்குச் சூட்டுகிறார். எல்லோரும் வாழ்த்துகிறார்கள்.)
சபையோர்:-சிரோரத்னங்களே !
விதூஷகர்:- ஐயையோ ! அவர்கள் மூவருக்கும்தான் சிரசிருக்கிறதோ? நாமெல்லாம் தலையில்லாத முண்டமா ? சபை:- (நகைத்து, இந்திரவீரன், மோஹனா, சரசர்
மூவரையும் பார்த்து)
மன்னவன் வலிசெங் கோவினா லன்றி வாளினால் சேனையா வில்லை, நன்னெறி வழுவா மன்னவன் றனக்கு நாடெல்லாம் போர ணுலகின்
மன்னுயி ரெல்லா மவன்படை யன்னோன் மனமெலா மவனுறை பீடம் இன்னதன் மையினா லரசளிப் பவனை யிகல்செயுந் தெறுநரு முளரோ?
என்னும் நீதிநூலின்படி அரசுபுரிந்து நீடூழிக்காலம் வாழ்
வீராக.
விதூ:-நான் ஒரு நீதிநூல் சொல்லிவிடுகிறேன். பிறகு ஆலத்தி யெடுக்கலாம்.
சபையோர்:-அப்படியே, சீக்கிரம் சொல்லும்.
விதூ:-
பணியோனுக்கழகு பிணியோடிருத்தல்
மன்னனுக்கழகு
மனுநீதிவழுவல்
அமைச்சர்க்கழகு சமைத்துவைத்தல்
மறையவற்கழகு
நிறையப்புசித்தல்
புலவற்கழகு
கலகம்விளைத்தல்
பண்டிதற்கழகு மண்டையையுடைத்தல்
பெண்டிர்க்கழகு
சண்டைபிடித்தல்
வைசியற்கழகு
வேசியர் வீடு