பக்கம்:இந்திர மோகனா.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வக்கீல் ஏ. நடேசப் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டவை.

கல்யாணி.

இஃது நன்னிலம் வக்கீல் நடேசப்பிள்ளையால் எழுதப்பட்டது. இவர் இதனுள் வியாஜ்யங்களையும், உலகவிவகாரங்களையும் எடுத்து வெகு விளக்கமாக விவரித்திருக்கின்றார். இதுவன்றி, வேசியால் நேரி டும் இழிவும் கஷ்டமும் இதன்கண் நன்கு விவரிக்கப்பட்டிருக்கின்றன. தர்மசொத்துக்களைப்பலவாறு மனம்போன்படி செலவிட்டுத்தாம் என்ற பெரும் அகம்பாவத்தில் மூழ்கியிருப்பவர்களைக் கண்டித்தும் எழுதப் பட்டுள்ளது. ஆகலான், இதை ஆண்பெண் இருபாலாரும் வாசிக்க விலை அணா 12. வேண்டியது அத்தியாவசியமாகும்.

பவளத்தீவு

அல்லது சுந்தரவரதராஜன்.

இது கற்பனைக் கதைகள் எழுதுவதில் பிரக்யாதி பெற்ற ரெயினால்ட்ஸ் என்பவரால் எழுதப்பட்டது. அதை தமிழில் மொழி பெயர்த்து எளிய நடையில் படிக்க மிக ஆச்சரியமாகவும், துக்ககரமாக வும் படிப்போர் மனதைக் கவரக்கூடியதாகவும் இருக்கும். இரண்டு பாகமும் ஒரே பையிண்டு செய்யப்பட்டிருக்கிறது.

கிருஷ்ணவேணி (அச்சில்)

விலை ரூ. 1 8 0

ஸ்ரீ நடராஜதத்துவம்.

ஒரு புதிய தமிழ் நூல்.

இதில் நடராஜதத்துவம், விபூதி மகிமை, உருத்திராக்ஷு மகிமை, பஞ்சாக்ஷர ரகசியம், ஸ்ரீ நடராஜ மூர்த்தி அபிக்ஷேக பூஜா உற்சவாதி கள் அடங்கியவை.

விலை அணா 08C

திரிபுரசுந்தரி அண்டு கம்பெனி,

2, கானாபாக் தெரு, திருவல்லிக்கேணி,.

சென்னை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/170&oldid=1559638" இலிருந்து மீள்விக்கப்பட்டது