பக்கம்:இந்திர மோகனா.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

(:)-

முதல் அங்கம். முதற்களம்

இடம்:- சந்திரபுரியில் நந்தவனம்.

காலம்:- மாலை.

(மோஹனா பாடிக்கொண்டே ப்ரவேசம்.)

ராகம் - ஸஹானா : தாளம்-சாபு.

1. ஏனோ என்னைப்படைத்தாய்

ஏ ஜகதீசனே

அவனிதனில் பாரமாய்

2.

சிற்றன்னை மொழியாலே சிறுமைப்படவோ ஈசா ! சிறுமியான் ஜனித்தது நெஞ்ச முருகவோ !

கானாற்று வெள்ளம்போற் கண்ணீர் பெருக்கியே கலங்க வைத்தாயோ ஈசா !

(a)

வானோர் புகழ்தக்க வலியோனைக் கண்டென் உடல்பொருள் ஆவியை ஒப்புவிக்க வைத்தாயோ! 3. பெற்றதாயை யிழந்த பேதையாகிய யிந்த அடியாளைக் காத் தருள்வாய்

உரியோனிடந்தன்னில் பரிவுடன் சேர்ப்பிக்க

ஈசா ! உன் அங்கிரியைப் பணிந்தேன் மோஹனாங்கி ஆ! ஜகதீசா! என் தலைவிதியை என்னென்று சொல் வது ? ஆறாத்துயரத்தை இளவயசிலேயே நீ ஊட்டினாய். தாயை யிழந்த துக்கம் தணியா திருக்க, இக்கொடிய மாற்றாந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/20&oldid=1559486" இலிருந்து மீள்விக்கப்பட்டது