4
இந்திர மோஹனா
தாயின் சூழ்ச்சிகள் எனது துன்பத்தீயை மூட்டுகின்றன. அந்தோ ! இப்பாவியின் வலையிற் சிக்கி என்னருமைத்தந்தை அல்லல்படுகிறார். அவள் தன்னுடைய அண்ணனான சாளுவ தேசத்தரசனுடைய புதல்வனான சாணக்கியனுக்கு என்னை மணம் புரிவிக்க நிச்சயித்திருக்கிறாள். அவ்வாறு செய்யின், அண்ணன்மகனை தன்வசப்படுத்திக்கொண்டு, தான்ராஜ்யத்தில் அதிகாரஞ் செலுத்தலாமென்று எண்ணி யிருக்கின்றனள். நேற்றுக்காலை நான் ஏன் இந்த நந்தவனத்தில் வரவேண்டும் ? அப்பாதை வழியே சென்ற அந்தச் சுந்தரபுருஷனை யாரென் றறிகின்றிலேன் அவரைக் கண்டதும் என் உடல், பொருள், ஆவி மூன்றும் அவர் வசமாகி விட்டன. அது முதல் என் மனம் தாமரையிலையில் நீர்த்துளிபோல் தத்தளிக்கின்றது. அப்போது அவர் ஆழ்ந்த சிந்தையி லிருந்தவர்போல் தோன் றினார். ஆ! அவர் அழகே அழகு!
திருக்கிளர் முகமும், கண்ணும், சிறந்த செம்பவள வாயும், மருக்கிளர் மாலை மார்பும், மகர குண்டலமுங் காதும், சுருக்கிய மருங்குங் கண்டாற் றுடியிடை மடவாராவி இருக்கினு மிருக்கு நில்லா
திறக்கினு மிறக்குமன்றே!
அவரை நினைக்கும்போது எனதுதுக்கம்மறைந்திட்டது. என் தந்தை இளையாளின் சொல்லைக்கேட்டு என்னை அலக்ஷி யஞ் செய்வதையும் நான் பொறுத்தேன். அச்சுந்தரனைக் கண் டது முதல் என் மனம் படும் பாட்டைப் பொறுக்க என்னால்