இந்திர மோஹனா
5
இயலவில்லை. அந்த உத்தம புருஷனைக் கண்ட கண்கள் மற் றொன்றினைக் கண்டு களிக்குமோ ? இச்சோலையின் அழகு என் மனத்தைக் கவரவில்லை. என்னையும் அறியாமல் நான் ஆனந்தக்கடலில் மூழ்குகின்றேன். ஆ! ஜகதீசா ! என்னை இவ்வாறு ப்ரீ க்ஷிக்கலாமா ? என் மனத்தை எவ்வளவு திடப்படுத்திக் கொண்டாலும், அது நிலைக்கவில்லை. ஆசையை மனத்திலிருத்தினபின் ஆசை நாயகனை என் முன் நிறுத்தாதி ருப்பது அழகாமோ ? ஈசனே ! இதுவும் உன் திருவிளையாட. லோ? ஆ! வீண் மனோ ராஜ்யத்தில் மூழ்கி நான் துன்பப் படுகிறேன். அந்த மஹாவீரனை நான் அடைய விரும்புவது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போலும். அந் தோ! இந்த விரகதாபத்தைப் பொறுக்க முடியவில்லையே.
(எந்தநேர்சினா வென்ற மெட்டு.) ராகம் - சாவேரி. தாளம்-ஆதி.
பல்லவி.
என்ன செய்குவேன்
எதற்கிந்தமோஹம்
அநுபல்லவி.
ஸந்ததமும் என்தன்
அகலாத என்தன்
இந்த நந்தவனந்தனில்
மந்தமாருதமாய் வந்த
தந்திரமாய் என்தன்
சரணம்.
கொள்ளை கொண்டு சென்ற
ரகுநாயகனே! என்மனந்தனில் (எ)
சிந்தையை விட்டு நா தனைக்காணாமல் (எ)
என்தன் கண்முன்
அந்த மன்னன்
அந்தரங்கந்தன்னைக் கொற்றவனைக்காணாமல் (எ)