பக்கம்:இந்திர மோகனா.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

இந்திர மோஹனா

வசனம்.

அன்பினுருவே! என் ஆவியை இவ்வாறு தவிக்கச் செய் வது நன்றோ !

சீ! சீ! என்ன எண்ணம் எண்ணினேன்? அவர் என்னைக் கண்டாரோ, இல்லையோ. கண்டிருந்தால், காதல் கொண்டாரோ, இல்லையோ. அவரை இன்னாரென்று அறி யாமலே இவ்விதம் நான் சஞ்சலமடையலாமா? பார்ப்பதற் குப் பரதேசிபோல உடை தரித்துக்கொண் டிருந்தாலும், அவர் முகத்தை உற்று நோக்கினபோது உயர்ந்த குலவீர ரைப்போல் தோன்றினார். அவர் உடை தரித்திருந்தது போல் உண்மையாய் சந்யாசியா யிருந்தால், நான் எப்படி உயிர் தரிப்பது? சாதுவின்மேல் மோகங்கொண்டபிறகு அதை எப் படித் தணிப்பது? இந்த எண்ணத்தைக் கட்டோடு விட்டு விடவேண்டியதுதான். ஆ! இவ்விதம் நினைக்கும்போதே என் மனம் இன்னது செய்வதென்று தெரியாமல் தவிக்கிறது. நான் அவ்வுத்தமரை எவ்வாறு மறப்பேன்? அவரை மறுபடி எப்பொழுது காண்பேன்?

(பஜாயிமைதில்கேல - என்றமெட்டு)

பல்லவி.

எப்பொழுது காண்பேன்

என்தன் நாதனை - நான்

கண்டால் கலிதீரும் - வீர்னை

(ST)

அநுபல்லவி.

இந்திரனோ,சந்திரனோ, இணையற்றமன்ம தனோ

அன்பனே ! உம்மீது ஆசைமிகக் கொண்டேனே எந்தவேளை எந்தனை நீர் ஆதரிக்க வருவீரோ! (எ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/23&oldid=1559489" இலிருந்து மீள்விக்கப்பட்டது