00
இந்திர மோஹனா
நிறைவேற்றாமலிருப்பளா? ஆ! நான் அவ்வளவு புண் ணியம் செய்திருந்தால், என்தாய் ஏன் இறந்திருப்பாள் ?. பெற்ற தாயை அம்மாவென்று அழைக்கும் பாக்கியம் நான் செய்யவில்லையே! அது நான் செய்த பாவம். கடந்த தைக் குறித்துக் கலங்குவதிற் பயனென்ன? பகவானே ? நான் கண்ட வீரனையாவது மணந்து மனமகிழ நீ அருள் புரியாயோ ?
(கருணாநிதே என்றமெட்டு)
ராகம் - காம்போதி: தாளம் - ஆதி
பல்லவி.
கருணா நிதே ! கமனீயகாத்ர! கரிரக்ஷகா!
என் கலி தீர்ப்பாயே !
அனுபல்லவி.
தருண மிதென்று ஸ்மரணைசெய்து
அங்கிரிதனிற் பணிந்தேன் பேதையான்
சரணம்.
மன்மதனைக் கண்டு மங்கை மோஹங்கொண்டு உருகித் தவிக்கும் மோஹந்தன்னை விண்டு மதன சுந்தரன் மலரடிகளில்
(க)
(க)
அடியாளைச் சேர்த்து வைப்பதுன்தன்பாரம் (க)
ஈசா! உன் அடியவளைக் கைவிடாமல் என் நேசனிடம் என்னைச் சேர்த்துவைப்பா யென்று நம்புகிறேன்.
(உற்றுக் கேட்டு) எதோ. காலோசை கேட்கிறது. நம்மைத் தேடிக் கொண்டு சாகரீகா வருகிறாளோ? (திரும்பிப் பார்த்து வெட் கித் தலைகுனிய விதூஷகன் பிரவேசித்தல்.)