இந்திர மோஹனா
9
விதூஷகன்-அம்மா என் தலை குனிகிறீர்கள்? நான் தான்; சாணக்கியன் அல்ல; அல்ல.மறந்துவிட்டேன்.நான்தான் தலையோடு பிறந்தவன்.
மோஹனா- என்ன விதூஷகரே? தலையில்லாமல் கூட யாராவது பிறக்கிறார்களா?
விதூஷகன் - ஐயோ! இது உங்களுக்குத் தெரியாதோ? பூமியிலுள்ள யாவரையும் அங்கமில்லாதவன் ஒருவன் அலை காற்றி லகப்பட்ட பஞ்சுபடுகிற பாடு படச் செய்கிறானே.
மோஹனா-அப்படிப்பட்டவன் யார் ? நான் இதுவரையில் கேட்டதில்லையே.
விதூஷகன் - ஒஹோ! நீங்கள் கேள்விப்படாமல் தானோ சற்று முன்னே (மேலே சொல்லாமல் நிறுத்தி விடுகிறான்,) மோஹனா - என்ன நிறுத்திவிட்டீர். முழுமையும் சொல்லும்.
விதூஷகன் இதோ சொல்லுகிறேன். ("மன்மதனைக் கண்டு ” என்று மோஹனா பாடிய சரணத்தைப் பாடுகிறான்.) மோஹனா- என்ன இது? சொல்லுகிறே னென்று பாட ஆரம்பித்துவிட்டீரே.
விதூஷகன் - நீங்களே அந்த மன்மதனைப்பற்றிப் பாடி விட்டு, என்னைக் கேட்கவேணுமோ? அவனுக்குத் தானே அநங்கன் என்று பெயர். அது கிடக்கட்டும். அம்மா!உங்களுக்கு முகூர்த்தங்கூட வைத்தாய் விட்டது. என்னைக் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்.
மோஹனா (திடுக்கிட்டு) ஹா! என்ன! முகூர்த்தமா? யாருக்கு? எப்போது? என்ன முகூர்த்தம்?