10
இந்திர மோஹனா
விதூஷகன் - யாருக்கா? யாருக்கென்று சொல்லும் இள
வரசியம்மாளுக்கே.
பாட்டு.
கண்ணாளத்திலே (நிறுத்திவிடல்)
மோஹனா- என்ன இது? உமக்கு ஏதாவது பைத்தி யமா என்ன? எனக்குக் கலியாணமாவது, எனக்குத் தெரியா மல் எப்படி நடக்கும். அதிருக்கட்டும். என்னை யாருக்குக் கொடுப்பதாக நிச்சயித்திருக்கிறார்கள்? உமக்குத் தெரியுமல் லவா, அதைச் சற்று சொல்லும்.
விதூஷகன் -
ஷை பாட்டு.
அந்தக் கட்டழகன் சாணக்கியனை
இந்த கட்டழகி கண்ணாலம் கட்டிகச்சலே மறந்துடா தெங்கோ.
சொந்த கண்ணாலத்திலே
ஜொகுசு கண்ணாலத்திலே
என்னைக் கொஞ்சம் மறந்துடா தெங்கோ.
மோஹனா- போதும், போதும். நிறுத்தும். அந்த முண்டத்தையா நான் மணப்பேன் !
விதூஷகன்-அம்மா! நீங்கள் என்னமோ பிகுவாயிருக்கி றீர்கள். விவாகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் ஆய்
விட்டன.
பந்துக்களும் எல்லோரும் வந்து விட்டார்கள். ஆகையால் என்பங்கு ஆமவடை நினைவிருக்கட்டும்.
மோஹனாஎன்ன ! யார் யார் வந்து விட்டார்கள்? நீர் சொல்வது எனக்கு விந்தையா யிருக்கிறது.