இந்திர மோஹனா
11
விதூஷகன்-அம்மா! வந்தவர்கள் எல்லோரையும் நான் பார்க்கவில்லை. அரசியம்மா எல்லாரும் வந்து விட்டதாகத் தெரிவித்தார்கள். வெள்ளிக்கிழமை முகூர்த்தமென்று கேள்வி. அப்போது,
பாட்டு.
அப்பளம் கிப்பளம் லட்டு கிட்டு பூரி கீரி அல்வா கில்வா துண்ணப்போற கண்ணாலத்திலே என்னை கொஞ்சம் மறந்துடா தேங்கோ. அம்மா! எனக்கு ஆமவடை ஆமவடை (குதிக்கிறான்) (சாகரீகா பிரவேசிக்கிறாள்)
சாகரீகா:- அம்மா! விதூஷகருக்குப்பைத்தியம் பிடித்து விட்டதா என்ன ? இப்படி குதிக்கிறாரே.
மோ:-சகி! உன் வரவைத் தான் வெகு நேரமாய் எதிர் பார்த்திருக்கிறேன்.
சா:-அம்மணி! உங்களை அரண்மனையில் பார்த்தேன், காணோம். ஒரு வேளை இங்கிருப்பீர்களென்று வந்தேன். நெடுநேரமாய்விட்டது, போகலாம் வாருங்கள்.
மோ:- ஆம் சகி, நான் வந்து சற்று நேரமாகிறது. புறப்படும்போது விதூஷகர் வந்து என்னமோ தாறுமாறாகச் சொல்லுகிறார். (விதூஷகனைப் பார்த்து) எதற்காக இப்படி குதிக்கிறீர்?
வி: அம்மணி! நான் ஆமவடையை நினைத்தேன். அப் போது சாகரீகாவும் வரவே, எனக்குச் சந்தோஷம் அதிக மாய்விட்டது. நீங்கள் சாணக்கியனை மணக்கும்போது நான் கல்யாணஞ் செய்து கொள்ளப்போகிறேன்.
சாகரீகாவைக்