பக்கம்:இந்திர மோகனா.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

இந்திர மோஹனா

அப்போது இரண்டு கல்யாணத்து ஆமவடையும் நிறையச் சாப்பிடலாமேயென்ற ஆசையால் குதித்தேன்.

சா:- வெகு நன்றாயிருக்கிறது. என்னையா கல்யாணம் பண்ணிக் கொள்ளப்போகிறீர்? பேஷ் உம் கல்யாணத்தழகும் ஆமவடையழகும். ஆமை வடையாம், ஊமை வடையாம்.

வி.ஹும். அவ்வளவு இளக்கரமாகவா இருக்கிறது உனக்கு? அதன் அருமையை நான் சொல்லுகிறேன், கேள். அதன் பாகத்தை நன்றாகக் கவனி. அப்போது தெரியும் அதன் பெருமை.

பாட்டு.

கம்பரிசி செம்பரிசி என்ற மெட்டு.) ஏகதாளம். துவரம் பருப்பும் உளுத்தம் பருப்பும்

குத்தி கொட்டிக் கிட்டு

அதைப் புடைத்து கொட்டிக்கிட்டு

அதை ஊற வைத்துக்கிட்டு

அதை ருப்பி வைத்துக்கிட்டு

அதை சுட்டுக்கிட்டு மோர்குழம்பில் ஊர வைச்சுக் கிட்டு

மணைமேலே மணைபோட்டு

உன்னையும் என்னையும் குந்தவைத்து தாம்புக் கயிற்றைக் கொணாந்து தாலியுருவை கோத்துக்கிட்டு

நுகத்தடியால் உன்னை யடித்துத் தாலியை யுன் கழுத்திற் கட்டி நீ முன்னே நான் முன்னே போட்டி மேலே போட்டி போட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/29&oldid=1559495" இலிருந்து மீள்விக்கப்பட்டது