இந்திர மோஹனா
தட்டிலிருக்கும் ஆம வடையை தட்டி கொட்டித் தின்னலா மடி ! பச்சை மிளகாய் பரிமளமும் கொத்தமல்லி வாசனையும் இஞ்சியுடைய யேற்றமும்
தயிரினுடைப் புளிப்பும் பெண்ணே! என்ன ஜோர் பலே பலே
என்ன ருசி பேஷ் பேஷ் - தில்லாலே.
13
இப்போது தெரிந்ததா ஆமவடையின் பெருமை ? அப்பாடா ? அந்தப் பேரைச் சொல்லும் போதே என் வாயில் ஜலம் ஊறு கிறது.
சா:-பேஷ், உம்மைக் கலியாணம் பண்ணிக்காமல் நான் இருப்பேனா ? நீர் சீக்கிரம் போய் தாம்புக்கயிறு திரிக்கச் சொல்லி, தட்டானுடன் தாலி பண்ணச் சொல்லும்.
வி:-அம்மாடி! என் வயிற்றில் பால்வார்த்தாயே. இதோ
போகிறேன்.
(பாடுகிறான்).
தோடி ராகம்
ரூபகதாளம்.
பப்பளிக்காய் பொருச்சுக் குழம்பு பணத்துக் கொன்னு ரெண்டுமூணு
நாலஞ்சா றேழெட் டொன்பது கரண்டி
அதிகருசி மிகுதிபசி நிறையபுசி மறையவசி
புசித்தவர் களெல்லாம் பிறர் தனைக் கண்டால்
(~)
தோம் தோம் ததிங்கண தோம் திம்திம் என்றாடுவர் (ப)