14
இந்திர மோஹனா
ஸாநி தபம்
ப
ரிஸநிதபம்
கம்நிதபம்
தநிசநிதம்
கரிசநிதம்
ப
நிஸாநி தநிஸநீதபம ப கமதநிஸரிஸநிதபாமப
ஸரிகரிஸநிரிஸநிதபம பப்பளிக்காய் பொருச்சுகுழம்பு* (இப்படி பாடிக்கொண்டே நிஷ்க்ரமித்தல்.)
மோ:-சகி! மனதில் எவ்வளவு துயரமிருந்தாலும் விதூ ஷகருடைய பரிகாசச் சொல்லும் பாட்டும் நகைப்பை யுண் டாக்குகிறது பார்.
சா:--அம்மணி! அதிருக்கட்டும். உங்கள் முகம் நேற்று முதல் வாட்டமடைந்திருக்கிறதே, ஏன்?
மோ:- சகி ! ஒன்றுமில்லை. என் தாய் இறந்ததைப் பற்றி நினைத்தேன். அதனால் என் முகம் மாறியிருக்கலாம்.
சா:-அம்மணி! என்னிடம் ஏன் ஒளிக்கவேண்டும். நான் யாரிடம் சொல்லப்போகிறேன்? அகத்தினழகு முகத் தில் தெரியும் என்றபடி உங்கள் முகம் மாறியிருப்பது தாயைக் குறித்து அல்ல. வேறு எதைப்பற்றியோ யிருக்கவேண்டு மென்று எனக்குத் தோன்றுகிறது,
மோ:-சகி! நான் உன்னிடம் ஏதாவது ஒளித்ததுண்டா இதுவரையில்? எல்லாம் என் காலவித்தியாசமே.
சா:-அம்மா! நீங்கள் இது வரையில் ஒன்றும் ஒளித்த தில்லை, வாஸ்தவந்தான். ஆனால் இன்று மாத்திரம் ஏன் ஒளிக் கின்றீர்கள்? உங்கள் முகத்தைப் பார்த்தால் ஒருபுறம் துக்க