16
இந்திர மோஹனா
சகி ! உன்னிடம் என் மனத்திலிருப்பதை யெல்லாம் சொல்லிவிட்டேன். இனி நீ ஆலோசித்து என்ன செய்வ தென்று சொல். என்முகம் வாடினதற்குக் காரணம் நீ தெரிந்துகொண்டாய். அரண்மனையில் நடக்கும் செய்தியாவும் உனக்குத் தெரிந்திருக்கலாம்.
சா:- ஆமாம் அம்மணி. நான் இன்று அரண்மனையில் அரசனும் அரசியும் பேசின இரண்டொரு வார்த்தைகளைக் கேட்டேன். அதாவது சாணக்கியனுக்குத் தங்களை நாளை வெள்ளியன்று பாணிக்கிரஹணம் செய்வதாக ஏற்பாடு செய் திருக்கிறார்கள். அந்த விவாகம் உங்கள் மனதுக்குச் சற்றும் சம்மதமாயிராது என்று எனக்கு தெரிந்திருப்பதால் அதைக் கேட்க எனக்கு மிகவும் சஞ்சலமாயே யிருந்தது. மனதை தளர விடாதேயுங்கள். எல்லாம் ஈசன் செயல் கடவுளை நம்பி னோர் கைவிடப்படார். ஆகையால் உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமான விவாகத்தை நடக்கும்படி கடவுள் செய்யமாட் டார். எதற்கும் பொறுமையாயிருங்கள். பொறுத்தார் பூமி யாள்வார் என்றபடி தங்கள் பொறுமைக்கு எப்போதும் குறைவு வராது.
மோ: (வெகு விசனத்தோடு) சகி! சற்று முன் விதூஷகன் சொன்னபோதுதெல்லாம் வேடிக்கை பண்ணுவ தாக நினைத்தேன். நீ அதெல்லாம் உண்மை யென்று சொல்லி விட்டாய். இனி நான் என் செய்வேன்?
(கண்ணீர் பெருகத் தோழியின் கையைப் பிடித்துக்
கொண்டு.)
(எந்துகுவாடலாகிநாடோ என்ற ஜாவளி மெட்டு)
கமாஸ் ராகம்
ரூபக தாளம்.