பக்கம்:இந்திர மோகனா.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

17

பல்லவி.

என்னசெய்வேன் ஏது செய்வேன்

என்தனுடைய தோழி

அநுபல்லவி.

(எ)

மன்னன் மாயரூபனைநான் எப்பொழுது காண்பேன் (எ)

சரணம்.

என்தனுடைய தந்தை யென்னை சாணக்கியனுக்கு பாணிக்ரகணம் செய்துகொடுக்க நிச்சயித்தா ரென்றாயே (எ) சகி.! என்னைப் பொறுக்கும்படி சொல்லுகின்றாயே; தலைமறையத் தண்ணிரில் முழுகிய பிறகு பொறுப்பது எங்ங னம்? யாவும் தீர்ந்துவிட்டதே. இனி

ஷ பாட்டின் சரணம்.

அ ண்ணனுடைய மகனுக்கென்னை கடிமணம் செய்து என்தன் கண்ணில் மண்ணைத் தூவிஹிம்சை செய்வாளே (எ) ஆ! சிற்றன்னையிடம் நான் இப்போது படும்துன்பம் போ தாதென்று இன்னமும் செய்ய நினைத்தல்லவோ இவ்வித ஏற் பாடுகள் செய்திருக்கிறாள். நான் இவ்விதம் சிறுமைப்படவோ சிறுமியாய் பிறந்தேன். ஐயோ!

ஷை சரணம்.

உயிர்தரித்து வாழ்வதைவிட இறப்பதே நலம் நன் என்னுடைய நாதனை நாண் மாலையிடுவேனோ !

(61)

சாகரீகா! நிலமகளிடம் சேருவதைத் தவிர இனிவேறு வழியில்லை.

சா-அம்மணி! அப்படிச் சொல்லா தீர்கள். இதைக் கேட்கும்போது என்மனம் துடிக்கின்றது. எல்லா மறிந்த

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/34&oldid=1559500" இலிருந்து மீள்விக்கப்பட்டது