18
இந்திர மோஹனா
கடவுள் யாவரையும் அவரவர் செய்கைக்கு ஏற்றவாறு சிக்ஷிப் நீங்கள் விசனப்படவேண்டாம். உங்கள் மனோபீஷ்
பார்.
டம் நிறைவேறுமென்று என்மனத்தில் திட்டமாய்த் தோன் றுகிறது. கேட்டீர்களா அதோ ஆந்தை கிளைகூட்டுகிறது. சந் தேகமேயில்லை. நீங்கள் தைரியமா யிருங்கள். கண்ணீர் விடாதேயுங்கள்.
மோ:- முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ என்பது போல், மணவோலை யனுப்பியபிறகு சகுனமென்ன? சாக்ஷி யென்ன? நீ ஒன்றும் தெரியாத பேதை போல் பேசுகிறாயே.
சா:-அம்மணி! மனுஷ்ய யத்தனத்தில் காரியம் ஆரம் பித்திருந்தாலும் கூட அதுமுடிவதற்குத் தெய்வானுகூலம் வே ண்டாமா?எதற்கும் இன்றுராத்ரி உங்கள் தந்தையும்சிற்றன்னை யும் நேரில் உங்களைக் கண்டு பேசப்போவதாய்க் கேள்விப்பட் டேன். அப்போது நீங்கள் தந்தையிடம் எனக்கு விவாகம் இப்போது வேண்டாமென்று மன்றாடிக் கேட்டுக்கொள்ளுங் அதற்கு அவர் மனம் இளகினாலு மிளகலாம். பிறகு நடப்பதைப்பற்றி யோசிப்போம். வெகு நேரமாய்விட்டது. மணி ஏழு இருக்கலாம். எழுந்திருங்கள் போகலாம். விசன த்தை யொழித்துப் பகவானைத் தொழுங்கள்.
கள்,
களை
மோ:- சகி ! எல்லாவற்றிற்கும் அநாதரக்ஷகன் பாதங் சரணமடைந்தேன். அவன் விட்ட வழி யாகட்டும். (ஆகாயத்தைப்பார்த்து) ஆபத்பாந்தவா! என் துபரத்தைத் தீர்ப்பது உன் பாரம். (என்று சொல்லிப் பாடுகிறாள்)
மோஹன ராகம் - ஆதிதாளம்
பல்லவி.
கருணாகரா! கரிராஜ போஷ!-ககவாஹனா!
காத்தருள்வாயே
(க)