இந்திர மோஹனா
19
யரமதயாளா பக்தவத்ஸலா
அனுபல்லவி.
பாரில் உன்னை நம்பிப்பணிந்தேன் மோஹனா
(க)
(இருவரும் நிஷ்க்ரமித்தல்)
முதற்களம் முற்றிற்று.
முதல் அங்கம். இரண்டாவது களம்.
இடம்:- பத்மபுரியில் தேவகியின் அந்தப்புரத்தின் வெளிப்
பக்கம்.
காலம்:-பகல்.
(விமலா நின்று கொண்டிருக்க ஜயசீலன் வெகு பரபரப்புடன்
பிரவேசித்தல்.)
ஜயசீலன்:-விமலா ! ராணியார் எங்கே? ராணியார் எங்கே? சீக்கிரம் சொல்.
விமலா :- என்ன எஜமான் இவ்வளவு அவசரமாய்க் கேட்கிறீர்கள்? ஏதாவது விசேஷமுண்டா?
ஜய: விமலா ! நீ இதையெல்லாம் இப்போது என்னைக் கேட்காதே. ராணியாரிருக்குமிடத்தைச் சீக்கிரம் சொல். விமலா:- தாங்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்கு அதிக திகிலாயிருக்கிறது. என்ன சமாசாரம்? என்னிடம்
சொல்லக்கூடாதா?
ஐய:- நான் என்னவென்று சொல்லுவேன். நினைக்கும் போதே என்னாவி தவிக்கிறது, நாவெழவில்லை. என் செய் வேன்? ஹா!