20
இந்திர மோஹனா
விமலா:- நீங்கள் தாமதிப்பதைப் பார்த்தால் யாருக்கோ ஏதோ பெருத்த ஆபத்து நேர்ந்திருப்பதுபோல் தோன்று என்ன செய்தி சீக்கிரம் சொல்லும்.
கிறது.
ஜய:- விமலா ! நான் இன்று காலையில் நகருக் கருகிலுள்ள மைதானமார்க்கமாய்ச் சென்றுகொண்டிருக்கை யில் இதர தேசத்துப் போர்வீரர்கள் நால்வர் நம் இளவரச ரைத் துரத்திச் சென்றனர். அதைக் கண்டு நான் அதிவேக மாய் ஓடி அவர்களைப் பிடிக்கப் போனேன். அதற்குள் இரு வர் என்னைத் தூக்கி ஒரு புதரில் எறிந்துவிட்டு இளவரசரை ஒரே வெட்டாக வெட்டிவிட்டார்கள். நான் மெதுவாய்
எழுந்து புதரைத் தாண்டி வெளியில் வந்து பார்க்கையில் இளவரசருடைய சவம் சின்னபின்னமாய்த் துண்டஞ் செய்யப் பட்டிருந்தது. அக்காட்சியைக் கண்டதும் என்னுயிர் நிலை யில் நிற்கவில்லை; தத்தளித்துக் கொண்டு ராணியாருக்குத் தெரிவிக்கலாமென்று ஒடி வந்தேன். நான் எப்படி இந்தத் துக்ககரமான செய்தியைத் தெரிவிப்பேன். ஐயோ! அந்தப் பாவிகள் என்னையும் கொன்றிருக்கலாகாதா? ஆ! இளவரசர் போய் நாம் எதற்குப் பூமியிலிருப்பது ?
விமலா:-ஐயோ! இதென்ன அநியாயம். எந்தக் கொலைப் பாதகர் இவ்விதம் செய்தது. இந்தச்சங்கடம் நமக்கே தாங்க முடியவில்லை. இதை ராணியாரிடம் எப்படிச் சொல்வது? அந்தஅம்மையின் உயிர் இச்செய்தியைக் கேட்ட மாத்திரத் திற் போய்விடும். ஐயோ! நான் என்ன செய்வேன்.
ஜய:- விமலா! நாம் துக்கித்துக்கொண்டிருந்தால் நாழி யாகிறது. நான் ராணியாரிடம் சீக்கிரம் தெரிவித்துவிட்டு அச்சண்டாளரைத் தேட வாரம்பிக்க வேண்டும். எங்கிருக் கிறார் அம்மா? சீக்கிரம் சொல்.