இந்திர மோஹனா
21
விமலா:-- அந்தப்புரத்தில் தான் இருக்கிறார்கள். சிரி த்து விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்த துக்கமான செய்தியை எப்படித் தெரிவிப்பது? ஹா! ஜகதீசா!
ஐய:-ஐயோ! இனித் தாமதித்தால் காரியம் கெட்டுப் போம். அங்கு ஆட்களைக் காவல் வைத்துவிட்டு வந்தேன். நான் சீக்கிரம் போய் மீதி ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். வா, உள்ளே போகலாம், (விசனத்துடன் இருவரும் அந்தப் புரத்திற்குள் நுழைகிறார்கன்.)
இரண்டாவது களம் முற்றிற்று.
முதல் அங்கம்.
மூன்றாவது களம்.
இடம்:- தேவகியின் அந்தப்புரம்:
காலம்:-மாலை.
தேவகியும் நீலாவும் வீற்றிருந்தபடி பிரவேசம்.
தேவகி:-நீலா! எத்தனை நாழிகை என் தலையை வாரு வாய்? சீக்கிரம் பின்னல் போடு; நாழிகையாயிற்று. ஒரு ஆட் டம் சதுரங்கம் ஆடலாம் வா.
நீலா:-அம்மணி! இதோ ஜடை போட்டாயிற்று. உங் கள் இஷ்டப்படியே ஆடலாம், வாருங்கள்.
(காய்களை வைத்து) நீங்கள் முன்னால் ஆடுங்கள். (இருவரும் ஆடுகையில் விமலாவும் ஐயசீலனும்
ஆத்திரத்தோடு பிரவேசித்தல்.)
க
தேவகி:- வாரும் ஐயசீலரே ! ஏது திடீரென்று இங்கே வந்தது? என்ன சமாசாரம்? (ஜயசீலர் மௌனமாயிருந்த தைக்கண்டு) என்ன பதிலொன்றும் காணோம். விமலா! என்ன