22
இந்திர மோஹனா
செய்தி! நீயும் பேசாமலிருக்கிறாய்,ஓர் ஆட்டம் ஆட
லாம்.
விமலா :- ஐயோ ! அம்மணி ! ஆட்டங்கூட வேணுமா இப்போது?(விசனக்குறியாயிருத்தல்).
தேவகி:- என்ன இது; நீங்கள் இருப்பதையும் உங்கள் முகத்தையும் பார்த்தால் எனக்கு மிகவும் திகிலாயிருக்கிறது.. என்ன செய்தி? உடனே சொல்லுங்கள். (ஆட்டத்தைவிட்டுக் கவுலையுடன் எழுந்து, மறுபடியும் இருவரும் பேசாதிருக்க) என்ன ஜயசீலரே! வந்தகாரியம் என்ன? சீக்கிரம் சொல்லும்.
ஜய:-(ஆத்மகதமாய்) ஐயோ ! யான் என் செய்வேன். எப்படிச்சொல்வேன்? ஜகதீசா ! இப்படியும் அநியாயம் நடக் குமோ ! ஐயையோ! அரசிக்கு நான் என்ன பதில் சொல் வேன்?
தேவகி:- என்ன ஐயசீலரே! ஏது நீர் மரியாதை தப்பி ஒருநாளும் நடக்காதவர் இன்று பதிலளிக்க மறுக்கின்றீர். என்ன நீரே பேசிக்கொள்கிறீர்! நீர் இருக்கும் மாதிரி எனக்கு ஒருவிதச் சந்தேகத்தை யுண்டாக்குகிறது. சீக்கிரம் சொல் லும். இல்லாவிடில் எனக்குக் கோபம் வரும்.
ஜய:- அம்மணி ! நான் என்னவென்று சொல்லுவேன், என் நா வெழவில்லையே.
தேவகி - என்ன! உம்முடைய நாவெழவில்லையா? என்ன இது! அப்படிப்பட்ட சேதி என்ன வந்துவிட்டது? யாருக்கு என்ன ஆபத்து? சீக்கிரம் சொல்லும்.
ஜய: அம்மா! நான் எத்தனைதரம் வாயெடுத்தாலும் என்நெஞ்சு அடைத்துக்கொண்டு போகிறது. நான் என் செய்வேன்? ஐயோ!