பக்கம்:இந்திர மோகனா.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

இந்திர மோஹனா

இளவரசர் தம்மை எமனுலகனுப்பியே ஏகினார் சண்டாளரும் இந்த நகரைவிட்டு

(எ)

தேவகி: ஆ! ஐயோ! என்னப்பா ! கண்மணி ஐயை யோ! (கீழேவிழுந்து அழூகிறாள்) ஐயோ! புத்ரா புத்ரா! நீயா விண்ணுலகம் புக்கனை?

நீலா:- தேவி! தேறுதலடையும் ஆறுதலடையும். (மற்றொருத்தி விசிறிகொண்டு வீசுகிறாள்.) தேவகி:-பிரமை கொண்டவள்போல் எழுந்து:-

ஆ! புத்ரா! என் ரத்னமே ! நீ இம்மாநில முழுதும் ஆளுவாயென்று எண்ணி யிருந்தேன்! என் எண்ணத்தில் மண்ணைப்போட்டு மடிந்தனையோ என் செல்வா! என்னை இந் நிலையிற் காண்பதற்கோ ஈசன் பிறப்பித்தான்? மைந்தா! உன்னை (பாடுதல்)

ராகம் - நீலாம்புரி.

பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்த பாலகனை பரலோக மனுப்பிவிட்டு பரிதவிக்கவிதியோ?

அப்பா! உன்னைப் பெற்ற காலத்தில் இவ்வயிறு எவ் வளவு சந்தோஷமடைந் திருந்ததடா? இப்பொழுது இப் பாவியின்

ஷை மெட்டு.

பெற்ற வயிறந்தோ பற்றி யெரிகிறதே

உற்ற வார்த்தை சொல்லாமல் மாண்டாயோ மைந்தா! கண்ணே! நீ சிறுவயதில் ஓடியாடி விளையாடிய பொழுது உன் பக்கத்தில் தாதிகள் பணிவிடைகள் செய்ய, இப்பாவி, உன்னை மகிழ்வோடு எடுத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/41&oldid=1559507" இலிருந்து மீள்விக்கப்பட்டது