பக்கம்:இந்திர மோகனா.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




.

இந்திர மோஹனா

ஷை மெட்டு.

தொட்டிலிலும் கட்டிலிலும் கண் வளரத் தாலாட்டி வளர்த்தது காலனிடம் சேர்ப்பதற்கோ பாலா!

25

என்னப்பா! உன்னைவிட்டு எப்படியடா இருப்பேன். உன்பொருட்டு நான் செய்துவந்த நோன்பெல்லாம் விழலுக் கிறைத்த நீராய்விட்டது. ஐயோ! எந்தச்சண்டாளன் உன் னைக்கொன்றான் ? என் செல்வா ! சந்திரகுலதிலகா ! என்னை இவ்விதம் விட்டுச்செல்வது வீர குலத்திலுதித்த உன் போன் றவனுக்கழகோ! நீ மாண்டாயென்ற செய்தியைக் கேட்டும் இந்த உடல் பிளக்கவில்லையே! இதென்ன கல்லோ ! வஜ் ஏமோ! தெரியவில்லை. (தலையிலடித்துக் கொண்டு), இப்புவியில் ஷை மெட்டு.

உன்னாலே யல்லவோ உலக வாழ்க்கையென்று எண்ணியிருந்த என்னை நட்டாற்றில் விட்டாயே பாலா !

அப்படி யெண்ணியிருந்த என்னைக் கைவிட்டு நீ எப்படி யடா சென்றாய்? ஐயோ! இனி யாரென்னை அம்மாவென் றழைப்பார்கள்? என் மைந்தனை மணமாலை சூட்டிப்பார்க்க வேண்டுமென்று வெகு ஆவலாய் நினைத்திருந்தேன். ஈசன் என் மைந்தனைப் பிணமாலை சூட்டிப் பார்க்க விதித்தாரே. ஐயையோ! நானென்ன செய்வேன் ! இனி எதை வேண்டி உயிர் வாழ்வேன். ஹா ! குமாரா! உன் திருமுகத்தை எப் பொழுது காண்பேன் யான்?

(கானடா ராகம்; ஆதிதாளம்)

என்னருஞ் சுதனே எங்கு நீ சென்றனை பொன்னிற மேனியா என்தனை விட்டு

முன்னம் துணிந்து நீ மடிந்தனையோ மகனே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/42&oldid=1559508" இலிருந்து மீள்விக்கப்பட்டது