பக்கம்:இந்திர மோகனா.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

இந்திர மோஹனா

சாஸ்திர விதிப்படி செங்கோல் செலுத்தி வந்து யாகமும் யோகமும் ஏற்றமுடனே செய்து தான தருமங்களும் ஈந்ததன் பயனிதுவோ?

தேஹி என்றவர்க்கு ஆசையுடன் ஓடி அள்ளிக்கொடுத்தது துள்ளி நீ மாளவோ

பிள்ளையாய்ப் பிறந்தாய் பாவியேன் குட்சியில்.

ஆ ! மைந்தா ! உன்னைவிட்டு எப்படிப் பிரிந்திருப்பேன்?- என் கண்ணே! அரவிந்தா ! இனி யாரை நான் ஆசையோடு அழைப்பேன். ஐயோ! உன்னைக்கொன்ற பாவிகள் என் னையும் கொன்று விட்டிருக்கலாகாதா. உன் தந்தை ஊரி லிருந்து வந்தால் நான் என்ன சொல்வேனடா?

தன்யாசி ராகம்.

மைந்தனை யில்லா விந்த மாளிகை தன்னில் வாழ்வு சந்திர னில்லா வானம் தாமரை யில்லாப் பொய்கை மந்திரி யில்லா வேந்தன் மதகரி யில்லாச் சேனை தந்திகளில்லா வீணை தாயில்லாக் குழவி போலாம்.

ஐயோ! சந்திரனற்ற வானம் போலாய் விட்டேனே. வானத்திற்காகிலும் சில நாள் சந்திரனில்லாம விருந்தாலும் மற்ற நாளில் சந்திரன் பிரகாசிக்கிறான். எனக்கு அக்கதி கூடயில்லை. என் கண்ணே! இத்துயரத்தை யெப்படித் தணிப்பேனடா. உன்னைப்போல் நானும் காலனுக்கு அடி மையான லொழிய என் சோகாக்கினி அழியாது. என்ன செய்வேன் குமாரா!

ராகம் - முகாரி ;]

தாளம்-ஆதி.

(நந்தனார் சரித்திர சிதம்பர தரிசனமாம் என்றமெட்டு.)

பல்லவி.

நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/43&oldid=1559509" இலிருந்து மீள்விக்கப்பட்டது