இந்திர மோஹனா
27
எமபுர தரிசனத்தை நீ எங்குத்
தேடிச் சென்றாயோ மைந்தா
அனுபல்லவி.
சமனிடம் சென்றுநீ செந்தழலில் என்னை
விட்டுவிட்டு நீ செல்வது நியாயமோ
ஆகாதேயப்பா வேகாதே நெஞ்சம்
உன் கையால் கொள்ளி போடாமலே-நீ
(எ)
(OT)
ஐயோ! மைந்தா! உன்னை ஐயிருதிங்களாய் அங்கமெ லாம் நொந்து பெற்ற தாய் பாவியாகிய எனக்கு நீ உன் சிறு கையால் ஒருகை நெருப்புப்போட பஞ்சமாய் விட்டதோ ஐயையோ! அதைத் திருப்பிச் சொல்லும்படியாய் நீ எனக்கு கட்டளை யிட்டாயோ? எப்படியடா உன்னை நான் உயிரற்ற உடலாய்க் காண்பது?
சரணம்.
செல்வனே உன்தனைச் செத்த பிணமாக சண்டாளி யானுமே காணவும் விதியோ? என் செய்வேனப்பா ? எங்குய்வேன் செப்ப வழி யறியாமலே வைத்து விட்டு நீ
(எ)
இந்தப்பதினெட்டு வருஷகாலமாய் அன்போடு வளர்த்த உன்னை இன்றைக்கு நெருப்பில் வைக்கவோ நான் பிறந்தேன். வேட்டையாடி வருவதாய்ச் சொல்லிச் சென்ற மகனைப் பிண மாகக் கண்டு கலங்க வைத்தாயே ஈசா! என்னப்பா ! கண் மணி! எனக்கும் நீ போன இடத்தைத் தெரிவிக்கலாகாதா. நான் உனக்கு அவ்வளவு உபகாரம் செய்திருக்கமாட்டேனா? உன்னைச் சுமந்து பெற்றதற்காகவாவது நீ எனக்கு இந்த உதவி செய்யலாகாதா? என் செல்வா ! என்னால் சகிக்க முடி யவில்லை! ஐயோ! அரவிந்தா ! என் கண்ணே ! நான் என்
?