28
இந்திர மோஹனா
னடா செய்வேன் ! என் வயிறுபற்றி யெரிகிறது. நீ எங்கா கிலும் சென்று வேட்டையாடிக் களை தெளிந்து, அம்மா நான் இதோ வந்து விட்டேன்; விசனப்படாதே என்று உன் வாயால் அழைக்கலாகாதா? பாவியாகிய நான் படுந் துய ரத்தை நீ அறியாயோ ஐயோ ! உலகில் ஒரு குழந்தையைப் பெறுவதற்கு எவ்வளவோ கஷ்டப்பட்டுத் தவம் செய்கிறார் கள்; மகளிர் குழந்தையைப் பெறுவதற்கு படும் கஷ்டத்தை நினைத்தால் இப்பூமியே நடுங்கும்; ஹா மைந்தா! உன் பொருட்டு நான் செய்த தவமும் பட்டதுன்பமும் என்ன வென்று ரைப்பேனடா?
ராகம் - முகாரி.
மாநிலந்தன்னில் மன்னனும் யானும்
செய்ததவத்தைச் ஆயனார் கோயிலில்
மாத வனடியை
சீதேவி கழலைச்
செய்த பூஜைக்குச் வரமது தந்தார்
உதரம் வந்தே
ஓராமாதம்
ஈராமாதம்
மூன்றா மாதம்
பாழும் மசக்கை பாவி யேனுடலில் நான்காமாதம்
மகப்பேறு வாய்க்க
மகிழ்வுடன் சேர்ந்து
செப்பவும் போமோ
அபிஷேகஞ் செய்து
மலரினர்ச்சித்து
சிறப்புடன் போற்றிச் சித்தமிரங்கியே வகையுடன் நீயும் யுறுங் கருத்தங்கிய
உருவது தரித்து இரு கண் சுழல
முகமெலாம் வெளுக்கப் பாதித்து வருத்திப்
பசுநரம் படா
நகிலம் கறுக்க